தீக்கதிர் முக்கிய செய்திகள்
12 Jul 2026, 9:10 pm

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களுக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் பணமும், அமைச்சர் பதவியும் கொடுத்து பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட முயல்கிறது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மூலம் பாஜக இந்த அடாவடியை மேற்கொண்டு வருகிறது.

தி ஜாமியா ஊடகம்

எஸ்ஐஆர் தொடர்பாக விளக்கம் அளிக்க ஒன்றிய அரசுக்கு ஐ.நா., சபை மே 1ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் 3 மாதத்திற்குப் பின் தற்போது தான் பொதுவெளியில் ஒரு செய்தியாக வந்துள்ளது. அதுவும் 3ஆம் கட்ட எஸ்ஐஆர் பணி நிறைவடைந்த உடன் ஐ.நா., சபையின் நோட்டீஸ் நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

கோழியை அறுத்துச் சாப்பிட்டால் அது ‘சிக்கன் பார்ட்டி (விருந்து)’, ஆட்டை அறுத்துச் சாப்பிட்டால் அது ‘மட்டன் பார்ட்டி’, ஆனால், இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் சிதைப்பதை மக்கள் ‘பாரதிய ஜனதா பார்ட்டி’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்

ராமர் கோவிலின் முன்னாள் பொறியாளர் தீனநாத் வர்மா கூறியதன் அடிப்படையில், கோவில் கட்டுமானத்திற்காக 40% கமிஷன் பெறப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியில் 40% கமிஷன் வசூலிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து ஏன் விசாரணை நடத்தக்கூடாது? ஊழல்வாதிகள் ஏன் பாதுகாக்கப்படுகிறார்கள்?