ஓமன் கடற்பகுதியில் டேங்கர் கப்பல் விபத்து சிக்கிக்கொண்ட 24 இந்தியர்கள்
8 Jun 2026, 8:46 pm

ஓமன் கடற்பகுதியில் டேங்கர் கப்பல் விபத்து சிக்கிக்கொண்ட 24 இந்தியர்கள்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்றத்துக்கு இடையே, ஓமன் வளை குடாவுக்குத் தெற்கேயும், ஓமனின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் ‘மாரிவெக்ஸ்’ என்ற வெளிநாட்டு டேங்கர் கப்பல் சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் திங்கள்கிழமை மதியம் 1:30 மணியள வில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதே போல கப்பலில் இருந்த 24 இந்தியக் கடல்சார் ஊழியர் கள் நிலை என்ன ஆனது என்பது தொடர்பாகவும் உறுதியான செய்திகள் வெளியாகவில்லை.

எனினும் 24 இந்தியர்களும் உயிருடன் இருப்பதாக செய்திகள் வெளியா கியுள்ளன. இதுதொடர்பாக ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநர் ஓபேஷ் குமார் சர்மா கூறுகையில்,”தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியர்களின் நிலை தொடர்பாக கூடுதல் தகவல்களைச் சேகரிக்க கப்பல் போக்குவரத்து அமைச்சகம், வெளியு றவு அமைச்சகம், கப்பலின் உரிமையாள ருடன் தொடர்பில் இருக்கிறோம்” என அவர் கூறினார்.

‘மரைன் டிராபிக்’ (கப்பல் கண்கா ணிப்பு) தளத்தின் கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, மாரிவெக்ஸ் கப்பல் இந்தியாவின் கார்வாரில் (கர்நாடகா) இருந்து ஓமனின் துக்ம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.