தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓமன் நாட்டில் உயிரிழந்த கப்பல் மாலுமி நிஷாந்த் உடல் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டது

24 Jun 2026, 9:40 pm
ஓமன் நாட்டில் உயிரிழந்த கப்பல் மாலுமி நிஷாந்த் உடல் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டது
<p><strong>ஓமன் நாட்டில் உயிரிழந்த கப்பல் மாலுமி நிஷாந்த் உடல் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டது</strong></p><p>தூத்துக்குடி, ஜுன் 24- ஓமன் நாட்டில் கப்பலில் உயிரிழந்த மாலுமி நிஷாந்த் உடல் ஜூன் 24 அன்று தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்தவர் நிஷாந்த். இவர், எம்.டி.செலஸ்டியல் என்ற வர்த்தக கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அந்த கப்பல் ரோமனா ஷிப் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தி ற்குச் சொந்தமானது. வளைகுடா கடல் பகுதியில் பயணித்த வர்த்தக கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எம்.டி. செலஸ்டி யல் கப்பல், ஓமன் கடற்பகுதியில் சென்று கொண்டி ருந்தது. கடந்த 8-ஆம் தேதி நிஷாந்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததால் மருத்துவ உதவி கேட்டு கப்பல் நிறுவனத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காத காரணத்தாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தா லும் நிஷாந்த் உயிரிழந்துள்ளார் என நிஷாந்தின் குடும்பத்தினரும், இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கம் மற்றும் அவர்க ளது சங்கமான எப்எஸ்யூஐ (FSUI) யும் குற்றம்சாட்டினர். அவரது உடலை கொண்டுவரக்கோ ரியும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு போராட்டம் நடத்தியது .அவரது குடும்பத்தினரும் ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் வலியுறுத்தினர். இந்நிலையில் புதனன்று அவரது உடல், 14 நாட்களுக்குப் பிறகு திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலமாக கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அமரர் உறுதி மூலம் தூத்துக்குடி குரூஸ்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு மாலு மிகள், பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தி வரு கின்றனர். அவரது உடல் லூர்தம்மாள்புரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிஷாந்த் உயிரிழப்பிற்கு காரணமான கப்பல் நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர இந்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நிஷாந்தின் மனைவியின் கோரிக்கையாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.