முந்தய பக்கம்

இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகே முடிவு திரிணாமுல் விவகாரத்தில் ஓம் பிர்லா உறுதி

16 Jun 2026, 8:54 pm
இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகே முடிவு திரிணாமுல் விவகாரத்தில் ஓம் பிர்லா உறுதி

இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகே முடிவு திரிணாமுல் விவகாரத்தில் ஓம் பிர்லா உறுதி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 28 எம்.பி.,க்களில் 20 பேர் தனி அணியாக செயல்பட்டு தங்களை இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி யின் (என்சிபிஐ) அங்கமாக அங்கீக ரிக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து கடிதம் கொடுத்த னர். இந்தக் கடிதம் தற்போது சபாநாய கர் ஓம் பிர்லாவின் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், இரு தரப்பு வாதங்க ளையும் கேட்ட பிறகே இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா முடிவெடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. விரை வில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியா கும் என மக்களவை செயலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வரவேற்பு

திரிணாமுல் எம்.பி.,க்கள் இணைந் தது தொடர்பாக என்சிபிஐ கட்சியின் செயலாளரான ஷாந்தனு தே கூறுகை யில்,“பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறேன். எம்.பி.,க்கள் தங்கள் கட்சியில் இணை வதை வரவேற்கிறேன். இதன்மூலம் கட்சி மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும்” என்று அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram