ஒலிம்பிக் பதக்கம் தமிழ்நாட்டின் கனவு! அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு
29 Oct 2026, 10:50 pm

ஒலிம்பிக் பதக்கம் தமிழ்நாட்டின் கனவு! அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு

சென்னை, அக். 29 -ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது தமிழ்நாட்டின் 100 ஆண்டுகாலக் கனவாக இருந்து வருவதாக விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர்ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள் ளார்.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர்கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்தச் சாம்பியன் பட்டத்தைக்கைப்பற்றியது.

இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்நடைபெற்ற நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார். வெற்றி பெற்ற வீரர்களுக்கும் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாவட்ட அணிக்கும் அவர் கோப்பைகளையும்பரிசுக ளையும் வழங்கி வாழ்த்தினார்.

அப்போது, விழாவில் பேசிய அமைச்சர், இம்முறை முதல்முறையாக முதலமைச்சர் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்க 27 லட்சம் பேர் பதிவு செய்து புதிய சாதனைபடைத்துள்ளதாகக் குறிப்பிட் டார். முதலமைச்சர் விஜய் விளையாட்டுத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.