மூதாட்டிக்கு மாரடைப்பு – உயிரை காத்த பேருந்து ஓட்டுநர்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>மூதாட்டிக்கு மாரடைப்பு – உயிரை காத்த பேருந்து ஓட்டுநர்</strong></p>
<p>கோவை, ஜன.7- காந்திபுரத்திலிருந்து அன்னூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டிக்கு திடீர் மார டைப்பு ஏற்பட்டபோது, ஓட்டுநர் மற் றும் நடத்துநரின் துரித நடவடிக்கை யால் அவர் உயிர் பிழைத்தார். கோவை மாவட்டம், அன்னூர் அரசு பேருந்து பணிமனைக்குட் பட்ட 45-C என்ற அரசு டவுன் பேருந்து காந்திபுரத்தில் இருந்து அன்னூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கோவை - சத்தி தேசிய நெடுஞ் சாலையில் அத்திப்பாளையம் பிரிவு பகுதியை கடந்தபோது, பேருந்தில் பயணித்த கோவை விசு வாசபுரத்தைச் சேர்ந்த மேரி (78) என்ற மூதாட்டி திடீரென மயங்கிச் சரிந்தார். இதை கவனித்த நடத்துநர் தினேஷ்குமார் (33), உடனடியாக ஓட்டுநர் மணிகண்டனிடம் தகவல் தெரிவித்தார். ஓட்டுநர் பேருந்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டு, இரு வரும் மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த அவர் கள், பேருந்தில் இருந்த பயணிகளி டம் அனுமதி பெற்று, பேருந்தையே ஆம்புலன்ஸ் போல மாற்றி கணபதி பகுதியில் உள்ள தனியார் மருத்து வமனைக்குச் சென்றனர். பின்னர், நடத்துநர் தினேஷ் குமார் பேருந்திலிருந்து மூதாட்டி யைத் தனது கைகளில் ஏந்தியபடி அவசர சிகிச்சைப் பிரிவிற்கு ஓடிச் சென்று அனுமதித்தார். அங்கு அளிக் கப்பட்ட தீவிர சிகிச்சையினால் மூதாட்டியின் உயிர் காப்பாற்றப் பட்டது. உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு அழைத்து வந்ததால் மூதாட்டி உயிர் பிழைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவியதைத் தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அன்னூர் பணிமனை சார்பில் போக்குவரத்து கழக மேலாளர், ஊழியர்கள் மணிகண்டன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌர வித்தார். குறிப்பிடத்தக்க நிகழ்வாக, கடந்த நவம்பர் மாதம் இதே 45-C பேருந்தில் பயணித்த ரவி என்பவ ருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபோதும், இதே நடத்துநர் தினேஷ்குமார் சக ஓட்டுநர் சசிகுமாருடன் இணைந்து அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிர் காப்பாற்றியுள்ளார். ஒரே நடத்துநர் இரண்டு முறை பயணிகளின் உயிரை மீட்ட சம்ப வம் நடைபெற்றது குறிப்பிடத்தக் கது.</p>
