முந்தய பக்கம்

119 டாலரைத் தொட்ட எண்ணெய் விலை: அமெரிக்க வாகன ஓட்டிகளுக்கு நெருக்கடி

21 Mar 2026, 2:42 pm
119 டாலரைத் தொட்ட எண்ணெய் விலை:  அமெரிக்க வாகன ஓட்டிகளுக்கு நெருக்கடி
<p><strong>119 டாலரைத் தொட்ட எண்ணெய் விலை: &nbsp;அமெரிக்க வாகன ஓட்டிகளுக்கு நெருக்கடி</strong></p> <p>ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் எரிசக்தி நிலையங்கள் மீது மாற்றி மாற்றித் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 119 டாலராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு காலன் பெட்ரோலின் தேசிய சராசரி விலை 3.84 டாலராக அதி கரித்துள்ளது, இது போர் தொடங்குவதற்கு முந்தைய மாதத்தை விட 32 சதவீதம் அதிகமாகும். ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து முரணான கருத்துகளைக் கூறி வருவது சந்தையில் குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலையைக் குறைக்க வெள்ளை மாளிகை மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை எந்தப் பயனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram