"எண்ணெய் அரசியல் ஏழு சகோதரிகளும் ஏகாதிபத்தியமும்" நூல் வெளியீடு
18 Jul 2026, 11:53 pm
<p><strong>"எண்ணெய் அரசியல் ஏழு சகோதரிகளும் ஏகாதிபத்தியமும்" நூல் வெளியீடு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்கள் வே.மீனாட்சி சுந்தரம், அ.பாக்கியம் எழுதியுள்ள "எண்ணெய் அரசியல் ஏழு சகோதரிகளும் ஏகாதிபத்தியமும்" என்ற நூல் வெளியீட்டு விழா ராயபுரம் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடசென்னை வாசி புத்தக நிலையத்தில் தமுகஎகச மாவட்டத் தலைவர் சி.விஜயன் தலைமையில் நடைபெற்றது. மூத்த பத்தரிக்கையாளர் ஆர்.விஜய் சங்கர் நூலை வெளியிட வன உயிரின ஆராய்ச்சியாளர் முனைவர். கிருபாநந்தினி பெற்றுக்கொண்டார். இதில் நா.விஜயகுமார் (வடசென்னை வாசி இலக்கிய மையம்), தமுஎகச மாவட்ட தலைவர் தி.ராஜேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
