தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொறையாத்தா! - கோவி.பால.முருகு

29 Nov 2025, 1:28 pm
பொறையாத்தா! -  கோவி.பால.முருகு

பொறையாத்தா! -  கோவி.பால.முருகு

“அறிவழகன்..உள்ளேன் அய்யா,  ஆறுமுகம்..உள்ளேன் அய்யா, வருகைப் பதிவு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் இளவழகன் அடுத்த பெயரைப் படித்தார். பாலு…டேய் பாலு” “அய்யா அவன் வரலய்யா!” “என்னடா..ஒரு வாரமா வராம இருக்கான்…எதனால?யாராவது அவன் வீட்டுக்குப் பக்கத்தில இருப்பவன் இருக்கீங்களா?” “அய்யா நான் அவன் இருக்கிற தெருவிலதான் இருக்கேன்.அவனுக்கு உடம்பு சரியில்லை அய்யா..ஆளு ரொம்ம மெலிஞ்சி போயிட்டான். அடிக்கடி வயித்தால போவுதாம்.இப்ப கொஞ்ச நாளா சாயந்திரம் ஆனா கண்ணு தெரியலியாம்.அதனால பள்ளிக்கு வரலய்யா..””சரிடா..அதுக்கு அவுங்க வீட்டுல என்னா மருத்துவம் செய்யிறாங்க?”

“அய்யா…அவன் எங்கேயோ போகாத இடத்துக்குப்  போயி எதோ காத்து கருப்பு அடிச்சிருக்குன்னு சொல்லிக்கிறாங்க..அதனால எங்க ஊரு பொறை யாத்தா கோயில்ல இருக்கிற பூசாரி ஒரு வாரம் கோயி லுக்கு வந்து வேப்பிலை அடிச்சிகிட்டுப் போகச் சொன்னா ராம்.அப்படி செய்தா உடம்பு சரியாயிடுமாம் அதனால தினந்தோறும் கோயிலுக்குப் போயி வேப்பலை அடிச்சிகிட்டு இருக்காங்க. அதுமட்டுமில்லாம பண்ருட்டியில இருக்கிற ஒரு சாமியார் கிட்ட போயி மந்திரிச்ச தாயத்த வாங்கிக் கட்டி யிருக்காங்க..நெறய செலவு பண்றாங்கய்யா…அவுங்க  அம்மா கூலி வேலைக்குப் போறாங்க அதுல தினந்தோறும் பூசாரிக்கு நூறு ரூபா தட்டில வைக்கி றாங்க..அது இல்லாம தாயத்து மந்திரிச்சி கட்டினதுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க”என்ற நீண்ட செய்தி யைச் சொல்லி முடித்தான் முடியரசன். “அடப்..பாவிகளா! இந்த காலத்திலேயும் இப்படிப் பட்டவர்களா!அறிவியலும் மருத்துவமும் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கு”மனத்தில் நினத்து வருந்திய படியே “…ம்ம்ம்..சரிடா நாளைக்கு அவுங்க அம்மாகிட்ட  சொல்லி பாலுவையும் அழைச்சிகிட்டு உங்கள அய்யா  வரச்சொன்னாரு..ஒன்னும் பயப்பட வேண்டாம்..உங்க மகன் உடல்நிலை சம்மந்தமா எதோ முக்கிய மான ஆலோசனை சொல்லணும்னாரு என்று சொல்லு” என்றார் வகுப்பாசிரியர் இளவழகன்.“சரி அய்யா” என்றான் முடியரசன். மறுநாள் காலை பதினோரு மணிக்குப் பள்ளிக்குப்  பாலுவை அழைத்து வந்திருந்தார் அவர் அம்மா.அப்போது வகுப்பறையில் இருந்த இளவழகன் “வாங்கம்மா…என்ன உங்க பையன் உடம்புக்கு”என்று கேட்ட உடனேயே முன்பு முடியரசன் சொன்ன அத்தனைச்  செய்திகளையும் சொல்லி முடித்தார் பாலுவின் அம்மா. “ஏம்மா…இந்த காலத்திலேயும் காத்து, கருப்பு, பேய், பிசாசுன்னு நம்புறீங்களே….இது சரியா?உடம்பு சரியில்லேன்னா டக்டர்கிட்ட உடனே அழச்சிகிட்டு போயி  காட்டாம…வேப்பலை அடிக்கிறது,தாயத்துக் கட்டுற துன்னு காலங்கடுத்தி கடைசியில மோசமான நிலை  வரும்போது டாக்டர்கிட்ட அழைச்சிகிட்டுப் போறீங்க. நோய் முற்றிய நிலையில் சில நேரம் காப்பாற்ற முடியா மலும் போகலாம்.அப்ப என்ன சொல்லுவீங்க? டாக்டர் திறமையானவர் இல்லேன்னு  குறை சொல்வதோடு இன்னும் பத்துபேர்கிட்ட இந்த டாக்டரைப் பற்றிக் குறை சொல்லி அவர் பெயரையும் கெடுத்துடுவீங்க..” சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாலுவின் அம்மா” அய்யா..அப்படிச் சொல்லாதீங்க..எங்க ஊரு பொறையாத்தா ரொம்ப சக்தி உடையவ எவ்வளவோ பேருக்கு வேப்பலை அடிச்சியே நோயைக் குணப்பதியிருக்காரு”என்றாள். “அப்படியா..!அப்ப உங்க ஊருல யாருமே டாக்டர்  கிட்ட போறதே இல்லியா?” என்று கேட்கும்போதே முடி யரசன்.”அய்யா…இவுங்க தப்பா சொல்றாங்கய்யா…நெறய பேரு டாக்டர்கிட்ட போயிட்டுதான் இருக்காங்க… இவுங்க பொறையாத்தா மேல இருக்கிற அதிகமான  நம்பிக்கையால் டாக்டர்கிட்ட காட்டாம இருக்காங்க” என்றான். அம்மா..நான் சொல்றத கேளுங்க…நான் அனுப வித்ததைச் சொல்றேன். பொய்யாவோ, கற்பனை யாகவோ சொல்லல.எனக்கு பதினைந்து வயது இருக்கும்போது இவனைப் போலத்தான் ஒரு நாளைக்கு  பத்து பதினைந்து தடவை வயித்தால போகும்.ஏன்..இரவு நேரத்தில கூட இரண்டு மூன்று முறை எழுந்து போயிடுவேன். அப்போது வறுமையில் இருந்த எங்கள் குடும்  பத்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்லமுடிய வில்லை என்பது மட்டுமல்ல,ஒரு ஆசிரியராக இருந்த  எங்க அப்பாவுவே என் உடல்நிலை குறித்த பார்வை யில் அலட்சியமாக இருந்துவிட்டார்.இல்லை யென்றால்..செலவில்லாமல்  அரசு மருத்துவ மனை யிலாவது காட்டியிருக்கலாம்.இப்போது ஒவ்வொரு ஊரிலும் இருப்பதுபோல் அரசு மருத்துவ மனைகள் இல்லை.எங்க ஊரிலிருந்து மூன்று மையிலுக்கு அப்பால்தான் அரசு மருத்துவ மனை இருந்தது.அதனால்  கூட இருந்திருக்கலாம். கடைசியில் என்னவாயிற்று தெரியுமா?உன் மகனுக்கு  ஏற்பட்டது போலவே இரவில் கண் தெரியாமல் போயிற்று  அதற்குப் பிறகுதான் மணல்மேடு அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார் எங்க அப்பா .டாக்டர் சோதித்து விட்டு மலத்தை டெஸ்ட்டு செய்ய ணும் அதனால அவனுடைய மலத்தை ஒரு சின்ன  பாட்டில்ல கொஞ்சமா போட்டு எடுத்துகிட்டு வாங்கன்னு  சொன்னாரு.அது போலவே மறுநாள் மலத்தை எடுத்துக் கொண்டு காலையிலேயே மருத்துவ மனைக்குப் போயிட்டோம். டெஸ்டு வந்த பிறகு அதை வாங்கிக் கொண்டு டாக்டர் இருக்கிற அறைக்குப் போய் அவரிடம் கொடுத்தோம். அவர் என் அப்பாவைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?”ஏங்க…நீங்க ஆசிரியர்தான தொடர்ந்து மாதக்கணக்கில் வயித்தால போவுது உங்க பையனுக்கு உடனே டாக்டர்கிட்ட காட்டணும்கிற எண்ணம் வர வேண்டாமா?அதனால் சுத்தமா இரத்தத்தில் இரும்பு சத்து இல்லாம போயிடிச்சு.அதனால மாலைக்கண் நோயும் வந்திடுச்சி.அதுமட்டுமல்ல வயித்தில நெறய புழுக்கள் இருக்கு.இவன் சாப்பிடுற உணவின் சத்தை எல்லாம் வயித்தில இருக்கிற புழு சாப்பிட்டுவிடும்.அதனால நான் எழுதிக்கொடுக்கிற மருந்தையெல்லாம் வாங்கி வேளாவேளைக்குக் கொடுக்கணும்.அதோட ஒரு ஊசி எழுதியிருக்கேன்.அதை ஆழமாகப் போடவேண்டும்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் இங்க வந்து போட்டுகிட்டுப் போங்க..”என்று கொஞ்சம் கோபத்தொடு கூறினார். அதன்படியே செய்த பிறகு என்னுடைய உடம்பு சரியாகி பழய நிலைக்கு வந்து விட்டேன்.அதே நிலை தான் உன் மகனுக்கும்.உடனே மருத்துவரிடம் அழைத்துச்செல்”என்று சொல்லி அனுப்பினார்’ சொல்லி அனுப்பிய நான்கு நாளில் பாலு பள்ளிக்கு வந்துவிட்டான்.அவனோடு அவன் அம்மா வும் வந்திருந்தார்.ஆசிரியர் இளவழகனைப் பார்த்து  அய்யா..நீங்கள் சொன்னது அப்படியே நூத்துக்கு நூறு உண்மைங்கய்யா.டாக்டரும் நீங்க சொன்னதைத்தான் சொன்னாரு.அதுபடியே செய்ததில இரண்டே நாள்ல பழைய நிலைக்கு வந்துட்டான்.நல்லா சாப்பிட றான்.ஓடியாடி விளையாடறான்.ரொம்ப நன்றிங் கைய்யா”என்று சொல்லிக் கை கூப்பி வணங்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.