வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
30 Oct 2026, 12:14 am
<p><strong>வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சேலம், அக்.29-எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்கக் கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் காலதாமதமின்றி உடனடியாக மதிப்பூதியம் வழங்க வேண்டும். எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் மற்றும் எஸ்ஐஆர் பணிகளுக்கு செலவிடப்பட்ட சில்லறை செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை நிலுவையின்றி முழுமையாக வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள அனைத்து அலுவலக உதவியாளர் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
