தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரும்பை கொள்முதல் செய்ய அதிகாரிகள் வரவில்லை!

10 Jan 2026, 2:48 pm
கரும்பை கொள்முதல் செய்ய அதிகாரிகள் வரவில்லை!
<p><strong>கரும்பை கொள்முதல் செய்ய அதிகாரிகள் வரவில்லை!</strong></p> <p>விவசாயிகள் கவலை சேலம், ஜன.10- செங்கரும்பை கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் வராத தால், விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன் னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி வருகிறது. இத்தொகுப்பில் ஒரு முழு நீள கரும்பு இடம்பெற் றுள்ளது. சேலம் மாவட்டத்தில் எடப் பாடி, கொங்கணாபுரம், ஓமலூர், தாசநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் செங்கரும்புகள் விளைச்சல் அதிகளவில் உள்ளது. ஆனால், இப்பகுதிகளுக்கு கரும்பு களை கொள்முதல் செய்ய வரும் அதிகாரிகள் ஒரு கரும்பை 15 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கும் கேட்ப தாகவும், ஒரு சில விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்ய கூட விவசாயத் தோட்டத்திற்கு அதி காரிகள் செல்லவில்லை என்று வேத னையுடன் விவசாயிகள் காத்திருக் கின்றனர். மேலும், அறிவித்த 38 ரூபாய் மதிப்பில் கரும்புகளை கொள்முதல் செய்ய அரசு உடனடியாக தலை யிட்டு, முழு தொகையும் விவசாயிக ளுக்கு வந்து சேர வேண்டும். அதே போல அனைத்து பகுதிகளுக்கும் அதிகாரிகள் சென்று கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். இடைத்தரகர்களின் தலையீடு மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட காவேரி கிராஸ், பொறையூர், செக்கானூர், சானவூர், கோல் நாயக்கன்பட்டி பகு திகளில் விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். தமி ழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் கரும்பு விநியோ கிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு கரும்பு ஒன்றுக்கு ரூ.38 வழங்கப் படும் என அரசு தெரிவிக்கப்பட்டுள் ளது. இதில் வெட்டுக்கூலி, போக்குவ ரத்தும் அடங்கும். விவசாயிகளிடம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொள் முதல் செய்ய குழுக்களை அமைத் துள்ளனர். தற்போது, செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடை பெற்று வரும் நிலையில், அதிகாரி கள் நேரடியாக கொள்முதல் செய் யாமல் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்வதாக புகார் எழுந் துள்ளது. மேலும், கரும்பு ஒன்றுக்கு ரூ.15 மட்டுமே வழங்குவதால் விவசாயிக ளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இத னால், கூட்டுறவுத்துறை அதிகாரி களே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேட்டூர் &ndash; &nbsp;எடப்பாடி சாலை பகுதியில் விவசாயி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவறிந்து வந்த வரு வாய்த்துறை அதிகாரிகள், காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.