தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடியிருப்பு அருகே கல்குவாரி துவங்கும் அனுமதியை ரத்து செய்யக்கோரி சிபிஎம்-பொதுமக்கள் போராட்டம் அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக அதிகாரிகள் உறுதி

5 Dec 2025, 4:21 pm
குடியிருப்பு அருகே கல்குவாரி துவங்கும் அனுமதியை  ரத்து செய்யக்கோரி  சிபிஎம்-பொதுமக்கள் போராட்டம் அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக அதிகாரிகள் உறுதி
<p><strong>குடியிருப்பு அருகே கல்குவாரி துவங்கும் அனுமதியை &nbsp;ரத்து செய்யக்கோரி &nbsp;சிபிஎம்-பொதுமக்கள் போராட்டம் அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக அதிகாரிகள் உறுதி</strong></p> <p>வெம்பக்கோட்டை, டிச.5- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்டது ஆ.லட்சுமிபுரம். இங்கு புதிதாக கல்குவாரி துவங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங் கியுள்ளது. இதனால் நீர் நிலை கள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. &nbsp;மேலும், கல்குவாரி அமைய வுள்ள இடத்தின் அருகே பட்டாசு ஆலையும் உள்ளது. இதன் காரண மாக வெடி விபத்து ஏற்பட்டு, மனித உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, வழங் கப்பட்ட அனுமதியை இரத்து செய்திட வேண்டுமென வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் சார்பில் ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. &nbsp;ஆனால் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. நவம்பர் 24 அன்று குவாரி துவங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. எனவே, வழங்கப்பட்ட அனு மதியை இரத்து செய்திடக் கோரி பொது மக்களுடன் இணைந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் &nbsp; காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் கே. கண்ணன் தலைமையேற்றார். துவக்கி வைத்து &nbsp; மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.மாரி யப்பன் பேசினார். மாவட்டச் செய லாளர் ஆ.குருசாமி கண்டன உரை யாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெருமாள்ராஜ், லட்சுமி, முத்து, சௌந்தர்ராஜன், முத்துலட்சுமி, கண்ணன், &nbsp; கிளைச் செயலாளர் சேகர் &nbsp;சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். &nbsp; தகவலறிந்து விரைந்து வந்த வட்டாட்சியர் கலைவாணி, காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் நாகராஜ் ஆகியோர் &nbsp;பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், &nbsp; கல்குவாரிக்கு &nbsp;பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிக மாக உள்ளது. இதனால், &nbsp;சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என அரசுக்கு அறிக்கை அனுப்புவதாகவும், &nbsp;10 நாட்களுக்கு எவ்வித பணிகளும் நடைபெறாது எனவும் உறுதிய ளித்தனர். இதையடுத்து போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.