தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வலங்கைமான் தீண்டாமைச் சுவர் 20 நாட்களில் அகற்றப்படும் சிபிஎம் போராட்டத்திற்குப் பின் அதிகாரிகள் உறுதி!

30 Jan 2026, 5:56 pm
வலங்கைமான் தீண்டாமைச் சுவர் 20 நாட்களில் அகற்றப்படும் சிபிஎம் போராட்டத்திற்குப் பின் அதிகாரிகள் உறுதி!
<p><strong>வலங்கைமான் தீண்டாமைச் சுவர் 20 நாட்களில் அகற்றப்படும் சிபிஎம் போராட்டத்திற்குப் பின் அதிகாரிகள் உறுதி!</strong></p> <p>திருவாரூர், ஜன. 29 &ndash; &nbsp;திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி, கோவில்பத்து 14ஆவது வார்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக எழுப்பப் பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வியாழக்கிழமை மாபெரும் போராட்டம் நடைபெற்றது. &nbsp;தலைவர்கள் பங்கேற்பு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் தலைமை தாங்கிய இந்தப் போராட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி, தலைவர் கே.முரளி, மாநிலச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எஸ்.இளங்கோவன் மற்றும் ஜி.சுந்தரமூர்த்தி, எஸ்.சுவாமிநாதன், என்.இராதா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை சுவரை அகற்றும் நோக்கில் போராட்டம் &nbsp;தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பி.கலைவாணி, ஏடிஎஸ்பி, வட்டாட்சியர் உள்ளிட்ட அதி காரிகள் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகள் நேரடியாகக் கள ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட பாதை முன்பு பொது மக்களால் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. எழுத்துப்பூர்வ உறுதிமொழி பேச்சுவார்த்தை முடிவுகளைச் செய்தி யாளர்களிடம் விளக்கிய பெ.சண்முகம் கூறியதாவது: &ldquo;சர்ச்சைக்குரிய வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் நில அளவை செய்ய அதி காரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆக்கிர மிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டால் 1905-ஆம் ஆண்டு சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும். மேலும், அங்கு கட்டப்பட்டுள்ள சுவர் அனுமதி யுடன் கட்டப்பட்டதா அல்லது வாய்க்கால் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப் பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, 20 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். பொதுமக்களுக்கு மாற்றுப்பாதை அமைத்துத் தரவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது&rdquo; இவ்வாறு அவர் கூறினார். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்று, காலை 11 மணிக்குத் தொடங்கிய போராட்டம் மாலை 4 மணியளவில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த வெற்றி, அப்பகுதி பட்டியலின மக்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. (ந.நி.)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.