தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்போரூர் நிலப்பிரச்சனையில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள்

9 Feb 2026, 3:02 pm
திருப்போரூர் நிலப்பிரச்சனையில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள்
<p><strong>திருப்போரூர் நிலப்பிரச்சனையில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள்</strong></p> <p>கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு செங்கல்பட்டு, பிப். 9 - திருப்போரூர் நிலப்பிரச்ச னையில் இந்து சமய அறநிலை யத்துறை அலுவலர்கள் அர சுக்கு அவப்பெயரை &nbsp;ஏற்படுத் தும் வகையில் செயல்பட்டு வரு வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். திங்களன்று &nbsp;(பிப்.9) செங்கல் பட்டில் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் அவர் கூறிய தாவது: &ldquo;செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் சுமார் 150 ஆண்டுகளாக விவசாயிகள் சாகுபடி செய்து வரும், ஏறத்தாழ 700 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களைக் கோவிலுக்கு சொந்தமான நிலம் எனக் கூறி, அறநிலையத்துறை செயல் அலு வலர்கள், &lsquo;ஆக்கிரமிப்பு அகற்றம்&rsquo; என்ற பெயரில் கையகப் படுத்துவது கடும் கண்டனத்திற் குரியது. இதுகுறித்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஏற்கெனவே இதுதொடர் பான வழக்கு நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) அதி காலை 3 மணி அளவில் அற நிலையத்துறை அலுவலர்கள் விளைநிலங்களுக்குச் சென்று, அவை அறநிலையத்துறைக்குச் சொந்தமானவை என அறி விப்புப் பலகை வைத்துள்ளனர். அர்த்த ஜாமத்தில் சென்று நிலத்தை மீட்டுவிட்டதாகக் கூறு வதை இப்போதுதான் பார்க்கி றோம். இந்தச் செயல் மிகவும் அபத்தமானது. தீர்ப்பு வருமுன் அவசரம் ஏன்? இந்த வழக்கிற்கு நீண்ட வர லாறு உள்ளது. கோவில் நிர்வா கம் 1987-ஆம் ஆண்டு முன்சீப் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட் டது. மாவட்ட நீதிமன்றமும் இந்த நிலத்திற்கும் கோவிலுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறிவிட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நிலம் கோவிலுக்குச்&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.