ஆட்சிமொழிச்சட்ட விழிப்புணர்வு பேரணி
26 Dec 2025, 4:32 pm
<p><strong>ஆட்சிமொழிச்சட்ட விழிப்புணர்வு பேரணி </strong> </p>
<p>இராமநாதபுரம்,டிச.26- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டிசம்பர் 26 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் , தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ்மொழி சட்டம் இயற்றப்பட்ட நாளினை நினைவுகூரும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, பார்வையிட்டார். இப்பேரணியில் முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல் கல்லூரியிலிருந்து 100 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் ஜ.சபீர்பானு, தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள், மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்கள், கலை பண்பாட்டுத் துறை பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மாணவர்கள், ஒருங்கிணைப்பா ளர் மு.லோகசுப்புரமணியம் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
