தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

17 Dec 2025, 4:11 pm
வாய்ப்பு வாசல்

இந்திய ராணுவ படையில் அதிகாரிகள்(CDS)

இந்திய ராணுவத்தில் அதிகாரிப் பணிகளுக்கு 451 காலியிடங்கள் நிரப்பப்பட  உள்ளன.  இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.  கல்வித்தகுதி: தரைப்படை(Army), விமானப்படை(Indian Air Force), கடற்படை(Navy) ஆகியவற்றிற்கு தனித்தனியாக கல்வித்தகுதிகள் தரப்பட்டிருக்கின்றன. இவை அறிவிக்கை யில் முழுமையாகத் தரப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பணிகளுக்கு குறைந்தபட்சமாக இளநிலைப் பட்டப்படிப்பு நிறைவு செய்திருந்தால் போதுமானது.   வயது வரம்பு : அனைத்துப் பணியிடங்களுக்குமே ஜனவரி  2, 2003க்கும், ஜனவரி 1, 2008க்கும் இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும்.   தேர்வு முறை: ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணித்தேர்வு (Combined Defence Service Exam)  மூலம் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் தவறான விடையளித்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் இருக்கும்.நேர்முகத்  தேர்வின்போதே அனைத்து சான்றிதழ்களும் பரிசோதிக்கப்படும். தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 12,  2026.  விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.200   செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பெண்கள், எஸ்சி / எஸ்டி பிரிவினர்களுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பித்த பிறகு நிரப்பப்பட்ட படிவத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வின்போது அது தேவைப்படும்.  இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரி யான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம்  உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித்தேதி டிசம்பர் 31, 2025 ஆகும்.

அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள்

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு நிறுவனம் (TN MRB) FIELD  ASSISTANT   பணிக்கு தகுதியானவர்களைத் தேர்வு  செய்ய உள்ளது. இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் லேப் டெக்னீசியன் பயிற்சியில்  குறைந்தபட்சம் ஒரு வருட படிப்பை முடித்திருக்கவேண்டும்.  வயது வரம்பு : ஜுலை 1, 2025  அன்று குறைந்தபட்சம் 18  முதல் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 48 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினரை தவிர இதர பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.  தேர்வு முறை: +2 பொதுத்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றுகளை கொண்டு வரவேண்டும்.  விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் களுக்கு ரூ.600 மற்றும் எஸ்சி / எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.300  செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க லாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.mrb.tn.gov.in.  என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.  விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித்தேதி டிசம்பர் 29, 2025 ஆகும்.

ராணுவத்தில் பணி(NDA)

முப்படைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. மொத்தம் 394 இடங்களை நிரப்புகிறார்கள். குறைந்தபட்ச கல்வித்தகுதி +2 ஆகும்.  ஜூலை 1, 2010க்குள் பிறந்திருக்க வேண்டும். யு.பி.எஸ்.சி. மூலம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு குறித்த கூடுதல் விபரங்களுக்கு  https://upsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி டிசம்பர் 30, 2025 ஆகும்.

கூட்டுறவு வங்கியில் வேலை

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 50 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். பொதுப் பிரிவினருக்கான உச்சபட்ச வயது 32 ஆகவும், மற்ற பிரிவினருக்கு 60 ஆகவும் நிர்ணயித்துள்ளார்கள். விண்ணப்பிப்பதற்கான இணைப்பு, கல்வித்தகுதி, தேர்வுமுறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களைப் பெற www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி டிசம்பர் 31, 2025 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.