மாதர் சங்க கொடியை அகற்றிய அதிகாரிக்கு கண்டனம்
24 Jan 2026, 3:38 pm
<p><strong>மாதர் சங்க கொடியை அகற்றிய அதிகாரிக்கு கண்டனம்</strong></p>
<p>அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14 வது அகில இந்திய மாநாட்டையொட்டி வைக்கப்பட்டிருந்த கொடியை அகற்றிய சென்னை மாநகராட்சி 55 வது வட்ட உதவி பொறியாளரை கண்டித்து வெள்ளியன்று (ஜன.23) ஏழுகிணறு பகுதியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். துறைமுக பகுதிச் செயலாளர் பகுதி செயலாளர் தென்றலரசி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வி.தனலட்சுமி, பகுதி தலைவர் வி.செங்கேணி, சிபிஎம் மத்தியசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அருள்குமார், துறைமுகம் பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜே.ரவிச்சந்திரன் லோ.விக்னேஷ் எம்.ஜலாலுதீன் கே.வடிவேல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
