தீக்கதிர் உலக செய்திகள்
3 Jun 2026, 8:58 pm

உலகப் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாகக் குறையும்

போர் தொடர்ந்தால் 1.8 சதவீதமாகவும் சரியக்கூடும் ஓஇசிடி (OECD) எச்சரிக்கை!

பாரிஸ், ஜூன் 3- உலகப் பொருளாதார வளர்ச்சியானது நடப்பாண்டில் (2026) 2.8 சதவீதமாகக் குறையும் என்று பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) கணித் துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாக இருந்த இந்த வளர்ச்சி, வரும் 2027-ஆம் ஆண்டு மீண்டும் 3.1 சதவீதமாக மீண்டு வரக்கூடும் என்றும் புதன்கிழமை வெளியான அதன் புதிய பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் அமெரிக்காவால் தூண்டப்பட்டுக் கொண்டே உள்ள போர் பதற்றமே இந்த பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது. மேற்கு ஆசியாவின் நிலைமை இன்னும் நிச்சய மற்றதாகவே உள்ளது. இந்த நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, ஓஇசிடி தனது பகுப்பாய்வை இரண்டு சூழல்களின் அடிப்படையில் கணித்துள்ளது: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப் பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வேகம் பெற்று, 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து எரிசக்தி (கச்சா எண்ணெய்) விலைகள் படிப்படியாகக் குறைந்தால், உலகப் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவிகிதமாக குறை யும். பின் 2027-இல் 3.1 சதவிகிதமாக உயரும். இந்த மோதல் மற்றும் பாதிப்புகள் 2027-ஆம் ஆண்டு வரை நீடித்தால், அதன் பொருளாதார மற்றும் சமூக விளைவுகள் மிகக் கொடூரமாக இருக்கும். இச்சூழலில், உலகப் பொருளாதார வளர்ச்சி 2026-இல் 2.1 சதவீதமாகவும், 2027 இல் 1.8 சதவீதமாகவும் சரியக் கூடும். இது சில நாடுகளைப் பொருளாதார மந்த நிலைக்குள் (Recession) தள்ளும் அபாயம் உள்ளது என தெரி வித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க இடதுசாரிகளின் மாநாடு

கேப் டவுன், ஜூன் 3- தென் ஆப்பிரிக்காவில் இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் தற்போது கைகோர்த்து வருகின்றன. கடந்த மே 29, அன்று, பல்வேறு சோசலிச, கம்யூ னிச மற்றும் பான்-ஆப்பிரிக்க (Pan-Afri canist) அமைப்புகள் ஒன்றிணைந்து “இடது சாரிகளின் மாநாடு” என்ற பெயரில் ஒரு வர லாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தை நடத்தி யுள்ளன.

“தொழிலாளர் வர்க்கம், மக்கள் அதிகா ரத்தை நிலை நாட்டுவதற்காக இடதுசாரி இயக்கத்தை உருவாக்குதல்” என்ற தெளி வான நோக்கத்தின் கீழ் இம்மாநாடு நடை பெற்றது. உலகளவில் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதிகள் தொடர்ந்து குறைக்கப்படுவது, முற் போக்கு அரசியலில் நிலவும் பிளவுகள் ஆகிய வற்றுக்கு மத்தியில், நாட்டின் இடதுசாரி அரசியலின் எதிர்காலத்தை மறுசீரமைப்ப தற்கான ஒரு முக்கிய முயற்சியாக இக்கூட்டம் பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், எகனாமிக் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ் (EFF), பான் ஆப்பிரிக்கனிஸ்ட் காங்கிரஸ் ஆஃப் அசா னியா (PAC), அசானிய மக்கள் அமைப்பு (AZAPO), உம்கொண்டோ வெ சிஸ்வே கட்சி (MK Party), சோசலிஸ்ட் பார்ட்டி ஆஃப் அசானியா, தொழிலாளர் சோசலிஸ்ட் கட்சி, சுதந்திர தொழிலாளர் கட்சி மற்றும் அந்நாட்டின் முக்கிய தொழிற்சங்க கூட்ட மைப்புகள் உள்ளிட்ட பல முற்போக்கு அமைப் புகள் கலந்து கொண்டன. மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகளும் தென் ஆப்பிரிக்காவின் இடதுசாரி ஒற்று மைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

வரலாற்று ரீதியாக தனித்தோ அல்லது தங்களுக்குள் போட்டியுடனோ செயல்பட்ட இந்த அமைப்புகள், தற்போது தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொ ருளாதார நெருக்கடிகளைத் தனித்தனியாக எதிர்கொள்ளாமல் ஒன்றிணைந்து எதிர் கொள்ளலாம் என ஒரே மேடையில் இணைந் திருப்பது இம்மாநாட்டிற்குப் பெரும் அரசியல் முக்கியத்துவத்தைத் தந்துள்ளது.

உலகளாவிய முதலாளித்துவம் தன்னை மறுசீரமைத்துக் கொண்ட விதம், உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்தி யுள்ளது என்றும் . தற்காலிகப் பணி நியமனம், தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல்கள் தொ ழிலாளர்களின் பலத்தைக் குறைத்துள்ளன. அதே நேரத்தில் முற்போக்கு இயக்கங்கள் கட்சிகளாகவும், சங்கங்களாகவும் சிதறிக்கிடக் கின்றன. எனவே, இந்த மாநாடு இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுவான தொழிலாளர் வர்க்க இலக்குகளை நோக்கிச் செயல்படுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த தளமாக அமையவுள்ளது என மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கான முழக்கம்

மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொ துச்செயலாளர் சோலி மாப்பைலா (Solly Mapaila), நாம் வெவ்வேறு அரசியல் அமைப் புகளைச் சேர்ந்தவர்கள், நமது சுதந்திரமான தனித்துவமான அரசியல் கட்சிகளைக் கலை க்கப் போவதில்லை. மாறாக, தொழிலாளர் வர்க்கத்தின் பொதுவான திட்டத்தை ஒருங்கி ணைப்பதற்கான ஒரு தளத்தை நாம் உருவாக்குகிறோம். இக்கூட்டம் கூட்டுச் செயல்பாட்டிற்கான ஒரு தளம் என்று குறிப் பிட்டார்.

சர்வதேச கார்ப்பரேட்டுகள் தங்களுக்குள் மிகத் துல்லியமாக ஒருங்கிணைந்து செயல் படும் போது, சோசலிசத்தை பேசும் அமைப்பு கள் தற்பெருமையாலும், கடந்த கால கசப்பு களாலும், கருத்தியல் குழப்பங்களாலும் முடங்கிக் கிடக்கின்றன என்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, சமூ கத்தை வேறு விதமாகவும் (சோசலிசப் பாதை யில்) கட்டமைக்க முடியும் என்பதை நிரூ பிப்பதே இடதுசாரிகளின் தார்மீகக் கடமை என்று ‘எகனாமிக் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ்’ (EFF) கட்சியின் தலைவர் ஜூலியஸ் மலேமா பேசினார்.

சர்வதேச கார்ப்பரேட்டுகள் தங்களுக்குள் மிகத் துல்லியமாக ஒருங்கிணைந்து செயல் படும் போது, சோசலிசத்தை பேசும் அமைப்பு கள் தற்பெருமையாலும், கடந்த கால கசப்பு களாலும், கருத்தியல் குழப்பங்களாலும் முடங்கிக் கிடக்கின்றன என்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, சமூ கத்தை வேறு விதமாகவும் (சோசலிசப் பாதை யில்) கட்டமைக்க முடியும் என்பதை நிரூ பிப்பதே இடதுசாரிகளின் தார்மீகக் கடமை என்று ‘எகனாமிக் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ்’ (EFF) கட்சியின் தலைவர் ஜூலியஸ் மலேமா பேசினார்.

இந்த முயற்சி ஒரு நிரந்தர ஐக்கிய முன்ன ணிக்கு வழிவகுக்குமா, அல்லது ஒரு புரட்சி கரக் கவுன்சில் அல்லது சோசலிச மாற்றத் திற்கான பரந்த இயக்கமாக உருவெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.