ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை திறந்து, தலித் மக்களை உடனே விடுதலை செய்க!
14 Jul 2026, 9:48 pm

ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை திறந்து, தலித் மக்களை உடனே விடுதலை செய்க!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 14 - ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலையை திறந்து, தலித் மக்களை உடனே விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலித் மக்களின் முயற்சியால் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலை கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக் கும் வடிவில் அமைக்கப்பட்டிருப்பதை கார ணம் காட்டி, சாதி ஆதிக்க மனப்பான்மை யுடன் சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த தால் கடந்த 5 ஆண்டுகளாக அச்சிலை திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டிருந் தது.

இந்தப் பிரச்சனைக்கு உரிய நேரத் தில் தீர்வு காணத் தவறிய மாவட்ட நிர்வா கத்தின் அலட்சியமும் தற்போதைய பதற்ற மான சூழலுக்கு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகத் தின் அனுமதியைத் தொடர்ந்து கடந்த 11.07.2026 அன்று அம்பேத்கர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதி ஆதிக்க சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வாறு சாதிய உணர்வுடன் எதிர்ப்பு தெரிவித்த வர்கள் மீது நடவடிக்கைகள் மேற் கொண்டு சிலை திறந்து வைக்கப்பட்டிருப் பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் சாதியவாதிகளின் அழுத்தத் துக்கு அடிபணிந்து அண்ணல் அம்பேத் கர் சிலையை மீண்டும் தடுப்புகள் அமைத்து மூடி வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.

அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கக் கோரி போராடிய தலித் மக்க ளின் குடியிருப்பிற்குள் காவல்துறை யினர் நுழைந்து தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதிய வர்கள் கைது அச்சத்தால் கிராமத்தை விட்டு வெளியே தங்கியுள்ளனர்.

மேலும், நீதிக்காக போராடிய 15 தலித் மக்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே தமிழ்நாடு அரசும், சேலம் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலை யிட்டு, ஒதியத்தூர் டாக்டர் பி.ஆர்.அம்பேத் கர் சிலையை திறந்து வைத்து நிரந்தர காவல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

சிலை திறப்பை எதிர்த்து சமூகப் பதற்றத்தைத் தூண்டியவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலித் மக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட காவல்துறை தடியடி மற்றும் அத்து மீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, கைது செய்யப்பட்ட 15 பேரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்து, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பழிவாங்கும் நோக்கி லான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

மேலும், ஒதியத்தூர் கிராமத்தில் தலித் மக்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது என மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித் துள்ளனர்.