தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இளம்பெண் சடலம் மீட்பு: ஒடிசாவை சேர்ந்தவர்!

4 Jul 2026, 12:50 am
இளம்பெண் சடலம் மீட்பு: ஒடிசாவை சேர்ந்தவர்!

இளம்பெண் சடலம் மீட்பு: ஒடிசாவை சேர்ந்தவர்!

கோவை, ஜூலை 3- கோவை மேற்கு புறவழிச் சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த மாதம் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அடையாளம் தெரி யாத சடலம் குறித்த போலீசாரின் விசாரணை யில் இப்பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவரின் கணவர் மணவியை கொலை செய்து விட்டு தப்பி யோடியுள்ளார் என்ற கோணத்தில் போலீ சார் விசாரித்து வருகின்றனர். இதனைய டுத்து கணவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.

மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் சட லம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக, மதுக் கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். எனினும், உயிரிழந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் எதுவும் கிடைக்காததால், தொடக் கத்தில் பெண்ணின் அடையாளத்தை கண்ட றிவதில் போலீசாருக்குப் பெரும் சவாலும் சிக்கலும் நீடித்து வந்தது. இந்நிலையில், தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சடலமாக மீட் கப்பட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷா (25) என்பது தற்போது உறுதி செய்யப் பட்டுள்ளது. இவர் தனது கணவர் ஜெகனு டன் கோவைக்கு வந்து தங்கி, இங்குள்ள பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு கூலித் தொழிலாளியாகச் சென்று வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கணவர் ஜெகனின் தாய், தந்தையை பிடித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

வர்ஷா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கணவர் ஜெகன் தப்பி யோடியுள்ளார். குடும்பத் தகராறு காரண மாக ஜெகனே தனது மனைவி வர்ஷாவைக் கொலை செய்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தின் பேரில், தனிப்படை போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், ஜெகன் பிடிபட்ட பிறகே, கொலை யின் பின்னணி குறித்தான முழு விபரங்க ளும் தெரியவரும் என போலீசார் தெரிவித் துள்ளனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.