தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒடிசா மின் துறையில் வெடித்த மாபெரும் தொழிலாளர் எழுச்சி டாடா பவர் ஆட்குறைப்புக்கு எதிராக 10,000 ஒப்பந்தத் தொழிலாளர் போர்க்கொடி!

19 May 2026, 9:58 pm
ஒடிசா மின் துறையில் வெடித்த மாபெரும் தொழிலாளர் எழுச்சி டாடா பவர் ஆட்குறைப்புக்கு எதிராக 10,000 ஒப்பந்தத் தொழிலாளர் போர்க்கொடி!

ஒடிசா மின் துறையில் வெடித்த மாபெரும் தொழிலாளர் எழுச்சி டாடா பவர் ஆட்குறைப்புக்கு எதிராக 10,000 ஒப்பந்தத் தொழிலாளர் போர்க்கொடி!

வேலைநிறுத்தம் 25

புவனேஸ்வரம், மே 19- ஆந்திரா, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலத்தின் மின் விநியோகத் துறை யும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியால் இன்று அதிர்கிறது.

அம்மாநிலத்தின் மின் விநியோகத்திற்கு டாடா பவர் (Tata Power) நிறுவனம் பொறுப்பேற்ற தைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக் கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வருவது ஒடிசா மின் துறை வரலாற்றில் கடுமை யான ஒரு தொழிலாளர் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இத்தொடரின் 25-ஆவது பகுதியில், உழைப்புச் சுரண்டல் மற்றும் அநீதியான ஆட்குறைப்புக்கு எதிராக ஒடிசா மின் தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள மாநில அளவிலான மாபெரும் போரா ட்டத்தின் பின்னணியை விரிவாகக் காண்போம்.

ஒடிசா மாநிலத்தின் மின் விநி யோகத் துறை தனியார்மயமாக்கப் பட்டு, டாடா பவர் நிறுவனத்தின் கூட்டாண்மை டிஸ்காம்கள் (TPNODL, TPSODL, TPCODL, TPWODL) செயல் பாட்டுக்கு வந்த பின்னர், அங்கு நிலவி வந்த உழைப்புச் சுரண்டல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மிகக் குறைந்த ஊதியத்தில் தினசரி 12 முதல் 14 மணி நேரம் வரை அசுரத்தன மாக உழைத்த சுமார் 10,000 ஒப்பந்த மற்றும் வெளிமுகமை (Outsourced) தொழிலாளர்களை நிர்வாகம் சட்ட விரோதமாகப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியதே இம்மாபெரும் கொந்த ளிப்பிற்கு உடனடிக் காரணமாகும்.

ஆட்குறைப்பு அராஜகமும் - தொடரும் கிளர்ச்சிகளும் அங்குல் (Angul) மையத்தின் வெளி முகமைத் தொழிலாளர்கள், அலுவலக இணைப்புப் பணியாளர்கள், முக்கிய செயல்பாட்டுப் பிரிவு பணியாளர்கள், கிராமப்புற மின்மயமாக்கல் (RE) ஊழி யர்கள், மின் துண்டிப்புப் படையினர் (DC Squad) மற்றும் துணை மின் நிலைய உதவியாளர்கள் (PSS Hel pers) எனப் பல்வேறு பிரிவினருக்கு டாடா பவர் நிர்வாகம் திடீர் பணிநீக்க அறிவிப்புகளை வழங்கியுள்ளது.

2026 மே முதல் வாரத்தில், ஆனந்தபூர் மற்றும் அங்குல் ஆகிய பகுதிகளில் உள்ள வடக்கு ஒடிசா மின் விநியோக நிறுவன (TPNODL) தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்து வீதிப் போராட்டங்களில் குதித்தனர்.

இப்போராட்டத்திற்கு மிக நீண்ட, உணர்வுப்பூர்வமான பின்னணி உண்டு.

கடந்த 2025 ஜூலையில், தெற்கு ஒடிசா பிரிவில் (TPSODL) திடீர் பணி நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளி ஒரு வர் தீக்குளிக்க முயன்ற சம்பவமும், 2025 டிசம்பரில் பொலாங்கிர் மற்றும் பூரி ஆகிய இடங்களில் சர்வாதிகாரமான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் எதிராகத் தொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து டாடா பவர் அலுவல கங்களை முற்றுகையிட்டதும் இப்போ ராட்டத்தின் வீரியத்தை வளர்த்தெடுத்தன.

அபாயகரமான பணிச்சூழலும் - கடுமையான ஊதியப் பாகுபாடும் புயல், வெள்ளம் மற்றும் கடுமை யான மின்தடை காலங்களில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களோ அல்லது காப்பீட்டு வசதிகளோ இன்றி ஆபத் தான களப்பணிகளில் ஈடுபடுத்தப்படு வது இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான்.

இத்தகைய அனுபவமிக்க உள்ளூர் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய மறுக்கும் நிர்வாகம், அவர்களைப் பழிவாங்கும் நோக்கில் மூன்றாவது தரப்பு ஏஜென்சிகளைப் பயன்படுத்தி வெளிமாநிலத் தொழி லாளர்களை அதிக ஊதியத்திற்குப் பணியமர்த்துவதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மறுபுறம், நிறுவனத்தின் நீண்டகால உள்ளூர் உழைப்பாளர்கள் பிஎஃப், மருத்துவக் காப்பீடு போன்ற எவ்வித சமூகப் பாதுகாப்பு பலன்களும் இன்றி, மிகக் குறைந்தபட்ச ஊதியத்தில் வறு மையின் விளிம்பிற்குத் தள்ளப்ப ட்டுள்ளனர்.

டாடா பவர் நிறுவனம் மின் இழப்பைக் குறைத்துவிட்டதாக தேசிய அளவில் பெருமை பேசிக் கொள்ளும் கார்ப்பரேட் லாபத்தின் பின்னால், அடிமைகளைப் போல் நசுக்கப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கண் ணீர் மறைக்கப்பட்டுள்ளதை தொழிற் சங்கங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

காந்தி மார்க்கில் முழங்கிய மாநில அளவிலான எழுச்சி ஒன்றிய அரசால் கொண்டுவரப் பட்ட புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கை களுக்கு எதிராக நாடு முழுவதும் விவ சாயிகளும் தொழிலாளர்களும் இணைந்து பிப்ரவரி 12 அன்று நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பொது வேலைநிறுத்தங்களின் தொடர்ச்சி யாகவே ஒடிசாவின் இந்த மின் துறை போராட்டமும் உருவெடுத்துள்ளது.

தங்களின் வாழ்வாதார உரிமை களை மீட்டெடுக்கவும், சட்டவிரோத ஆட்குறைப்பை உடனடியாக நிறுத்தக் கோரியும், மே 18 அன்று ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற காந்தி மார்க் (Gandhi Marg) திடலில் பல்லாயிரக்கணக்கான மின் துறை ஒப்பந்தத் தொழிலாளர்கள் திரண்டு மாபெரும் கூட்டுப் பேரணி யையும், மாநில அளவிலான முற்றுகை போராட்டத்தையும் நடத்தினர்.

அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளையும், கார்ப்பரேட் சூழ்ச்சிகளையும் முறி யடித்து, தங்களின் மனிதக் கண்ணி யத்திற்காகவும், வேலை பாதுகாப்பிற் காகவும் ஒடிசா மின் தொழிலாளர்கள் ஒற்றை வர்க்கமாகத் திரண்டு நடத்தி யுள்ள இந்தப் போராட்டம், மின் துறை யைத் தங்களின் லாப வேட்டைக்காக்க துடிக்கும் கார்ப்பரேட் முதலாளித்து வத்திற்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கையாகும்.

லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.