பிஜேடி, காங்கிரஸ் கட்சிகளின் தகுதிநீக்க மனுக்களை தள்ளுபடி செய்த ஒடிசா சபாநாயகர்
yesterday
<p><strong>பிஜேடி, காங்கிரஸ் கட்சிகளின் தகுதிநீக்க மனுக்களை தள்ளுபடி செய்த ஒடிசா சபாநாயகர் </strong></p><p>பாஜக ஆளும் ஒடிசாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்க ளவை தேர்தலின் போது கட்சி மாறி வாக்களித்ததாக குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏக்களுக்கு எதிராக பிஜு ஜனதா தளம் (8 எம்எல்ஏக்கள்), காங்கிரஸ் (3 எம்எல்ஏக்கள்) கட்சிகள் தாக்கல் செய்த தகுதிநீக்க மனுக்களை அம்மா நில சட்டப்பேரவைத் தலைவர் சுராமா பாதி தள்ளுபடி செய்துள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில், பிஜேடி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் கூட்டுப் பலம் சட்டப்பேர வையில் ஒரு இடத்தை வெல்வதற்குப் போதுமானதாக இருந்தபோதிலும், கட்சி மாறி வாக்களித்ததன் காரணமாக இந்த இரு கட்சிகளும் இணைந்து ஆத ரித்த சுயேச்சை வேட்பாளர் தோல்விய டைந்தார். பாஜக ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் 10ஆவது அட்டவணையின் கீழ் இந்த 8 சட்டமன்ற உறுப்பினர்களும் தாங்களாகவே முன்வந்து கட்சியின் உறுப்பினர் பத வியைத் துறந்துவிட்டதாகக் கூறி, அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று பிஜேடி கோரியி ருந்தது. அதே வேளையில், மூன்று எம்எல்ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் தகுதிநீக்க மனுவைத் தாக்கல் செய்திருந்தது.</p><p> ஒடிசாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக 3 இடங்களிலும், பிஜேடி ஒரு இடத்திலும் மட்டுமே வென்றது. ஆனால் பிஜேடி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்காமல் இருந்தால், பிஜேடி மேலும் ஒரு இடத்தை கைப்பற்றி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
