தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒடிசாவில் தீவிரமடையும் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம்

24 Sept 2026, 9:09 pm
ஒடிசாவில் தீவிரமடையும் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம்

ஒடிசாவில் தீவிரமடையும் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம்

புவனேஷ்வரம்பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தின் கொய்டா சுரங்கப்பகுதியில் கனிம வளங்கள்கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் செல்வதையும் சுரண்டப்படுவதையும் எதிர்த்தும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மற்றும் ஐக்கிய சுரங்க மஸ்தூர்யூனியன் ஆகியவற்றின் தலைமையில் ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்களும் உள்ளூர் பழங்குடியினமக்களும் பங்கேற்ற பிரம்மாண்டப் போராட்டம், வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

சேலம் இரும்பு ஆலை நிறுவனத்திற்குச் (SAIL) சொந்தமான கல்டா, தால்டி, பர்சுவா, ராக்ஸி, படாசாஹி, பிம்லாகர்மற்றும் ரங்ராசுரங்கப் பகுதிகள் மற்றும் ரயில்வே பக்கவாட்டுப் பாதைகளில் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் ராக்ஸி மற்றும்படாசாஹி ஆகியஇடங்களில் ரயில் மறியல்களும், ராக்ஸியில் தேசிய நெடுஞ்சாலை520 (NH-520) முடக்கப்பட்டுச் சாலை மறியலும் மேற்கொள்ளப்பட்டன. போராட்டங்களின் போது அனைவருக்கும்வேலைவாய்ப்பு, குறைந்தபட்ச ஊதிய உயர்வு,கண்ணியமான வாழ்வாதாரம், மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளின் பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளுடன், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம், 2026-ஐ (MMDR Amendment Act, 2026) உடனடியாக வாபஸ் பெற வேண்டும், ஒடிசாவின் கனிம வளங்கள் மக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், கார்ப்பரேட் சுரண்டல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு மாநிலத்தின் கனிமவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன.

இந்தப் பிரம்மாண்டப் போராட்டத்தில், சிபிஎம் போனாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமண் முண்டா, மாநில செயற்குழு உறுப்பினர் பிரமோத் குமார் சமால் மற்றும்சிஐடியு தலைவர் பிரபாத் குமார் பாண்டா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.