தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டாக்ஸி, பைக் ஓட்டும் கிக் தொழிலாளர்கள் போராட்டம் தாக்குதல் ஏவிய காவல்துறை

19 Aug 2026, 8:28 pm
டாக்ஸி, பைக் ஓட்டும் கிக் தொழிலாளர்கள் போராட்டம் தாக்குதல் ஏவிய காவல்துறை
<p><strong>டாக்ஸி, பைக் ஓட்டும் கிக் தொழிலாளர்கள் போராட்டம் தாக்குதல் ஏவிய காவல்துறை</strong></p><p>ஒடிசாவில் சமூக பாதுகாப்பு கேட்டு வேலை ஆப் அடிப்படையிலான டாக்ஸி மற்றும் பைக் ஓட்டும் கிக்தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறை வன்முறையைபிரயோகித்த காரணத்தால் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.இதனால் பேருந்துகள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பேருந்துகளையும் சேதப்படுத்தியதாகக் காவல்துறை தரப்பில்கூறப்பட்டுள்ளது. </p><p>கட்டண உயர்வு, செயலிக் கட்டணத்தைக் குறைப்பது, சமூகப் பாதுகாப்பு இல்லாத நிலை மற்றும் இதரசலுகைகள் உட்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு ஆன்லைன்வாகனச் சேவை நிறுவனங்களில் பதிவுசெய்துள்ள ஓட்டுநர்கள் ஆகஸ்ட் 17 முதல்வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.நூற்றுக்கணக்கான டாக்ஸிகள் மற்றும் பைக்குகளுடன் போராட்டக்காரர்கள் பேரணியும் சென்றனர். அந்த பேரணியை காவல்துறை தடுத்த போது கலவரம் வெடித்துள்ளது.அதனைத்தொடர்ந்து அது முற்றிலும் சட்டவிரோதமான போராட்டம் எனக்கூறி30-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்து விட்டது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் சம்பந்தமற்றவை, அவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் அரசாங்கத்திற்கு எந்த பங்கும் இல்லைஎனவும் அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.