ஒடிசாவின் கஞ்சம் பகுதியில் வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்க! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
30 Oct 2026, 9:20 pm

ஒடிசாவின் கஞ்சம் பகுதியில் வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லிவங்கக்கடலில் உருவான‘அர்னாப்’ புயல் புதன்கிழமை காலை ஆந்திர மாநிலம் நர்சாபூர் அருகே கரையைக் கடந்தது. இந்த அர்னாப் புயல் ஒடிசாவில் கரையைக் கடக்கவில்லை என்றாலும், கனமழைவெள்ளத்தால் அம்மாநிலக்கடலோர மாவட்டங்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கஞ்சம் மாவட்டத்தில் சுமார் 300 கிராமங்கள் வெள்ளநீரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கஞ்சம் பகுதியில் துரிதமாக மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஒடிசா பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்

பாக சிபிஎம் மத்தியக்குழு டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் வரலாறு காணாத வெள்ளப்பேரழிவை எதிர்கொண்டு போராடி வருகிறது. 22 வட்டாரங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள்வெள்ளத்தாலும், கனமழையா லும் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி யுள்ளனர். இதில் தராகோட், சோரடா, அஸ்கா, பத்ரபூர், ஹிஞ்சிஜிலிகட், சானகேமுண்டி, சிகடி, திகபஹண்டி, புருஷோத்தம்பூர் மற்றும் பெர்ஹாம்பூர் நகரம் உள்ளிட்ட பலபகுதிகளும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள்வெள்ளநீரால் பிற பகுதிகளி லிருந்து முற்றிலும் துண்டிக்கப் பட்டு, தனி தீவாகியுள்ளன.

இது வெறும் இயற்கைச் சீற்றம் மட்டுமல்ல; ஒரு மிகப்பெரிய மனிதநேய நெருக்கடியாகும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்வு, வாழ்வாதார இழப்பு, பயிர்கள் மற்றும் சொத்துகளின் சேதம் மற்றும் தங்களின் உயிர்மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன.

அதனால் கஞ்சம் மாவட்டத்தில் மனித உயிர்களைப் பாதுகாத்தல், அவசர மீட்பு மற்றும் வெளியேற்றம், உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவப் பராமரிப்பு

தங்குமிடம் மற்றும் தடையற்ற நிவாரணப் பணிகளைச் செயல்படுத்துதல் ஆகியவையே தற்போதைய உடனடி முன்னுரிமை யாக இருக்க வேண்டும். அரசு இந்நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டும், பொறுப்புணர்வை உறுதிசெய்தும், கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் தாமதமின்றிப் பயன்படுத்த வேண்டும்.கஞ்சம் மாவட்டம் தனிமையில் தவிக்க விட்டுவிடக் கூடாது. மக்களுக்கு உடனடி நடவடிக்கை தேவை, வெறுமனே வாக்குறுதிகள் அல்ல.

கஞ்சம் பகுதி மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகத் துணைநிற்கிறது. பேரழிவை ஏற்படுத்தியுள்ள வெள்ளப்பெருக்கிற்கு இடையே, சிக்கித் தவிப்பவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்கவும், மனித உயிர்களைப் பாதுகாக்கவும், அவசர நிவாரணப் பொருட்களை வழங்கவும்பெரிய அளவிலான அரசு தலையீட்டை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனச் சிபிஎம் கோருகிறது” என வலியுறுத்தப்பட்டுள்ளது.