தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனிநபருக்காக மக்களின் உயிர்களை பறிப்பதா? ஒட்டன்சத்திரம் குடியிருப்பு பகுதிகளில் உயரழுத்த மின்கம்பியை அமைக்கும் பணிகளை நிறுத்துக

29 May 2026, 10:18 pm
தனிநபருக்காக மக்களின் உயிர்களை பறிப்பதா? ஒட்டன்சத்திரம்  குடியிருப்பு பகுதிகளில்  உயரழுத்த மின்கம்பியை அமைக்கும் பணிகளை நிறுத்துக
<p><strong>தனிநபருக்காக மக்களின் உயிர்களை பறிப்பதா? ஒட்டன்சத்திரம் குடியிருப்பு பகுதிகளில் உயரழுத்த மின்கம்பியை அமைக்கும் பணிகளை நிறுத்துக</strong></p><p>ஒட்டன்சத்திரம், மே.29- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் தீயணைப்பு நிலையத்திலி ருந்து கே.கே. நகர் செல்லும் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகு தியில் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும், தனிநபர் மற்றும் அவரது உறவினர் தனது ரியல் எஸ்டேட் தொழிலுக்காக காலிமனை யிடங்களை பிரித்து, விற்பனை செய்து வருகிறார். காலிமனைகளை விற்பனை செய்த பின்பு மீதமுள்ள இடத்தில் உயரக மின்சார வயர்கள் செல்கிறது. இந்த மின்சார வயர்களை பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் தெருபகுதியில் மாற்றி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இப்பகுதியில் குடியி ருக்கும் பொதுமக்கள் உயரழுத்த மின்சார வயரை காலியிடத்திலிருந்து குடியிருப்பு பகுதிகுள் மாற்ற வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியில் மின்சார வயர்களை மாற்றி அமைத்தாால் வீட்டில் இருந்தே வயர்களை கையால் தொடும் உயரத்தில் உள்ளது. ஏற்கனவே குறிஞ்சி நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டு மாடியில் பணி செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின்சார வயர்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மாட்டுச் சந்தை அருகே உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் சந்தைக்கு வந்த வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். இதனை கருத்தில் கொண்டு, பொது மக்கள் அதிகளவில் நடமாடும் பகுதி என்பதாலும் பள்ளி குழந்தைகள் அதிகளவில் இவ்வழியில் செல்வ தாலும் இந்த மின்வயர்களை மாற்று வதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் குடியி ருப்பு பகுதியில் நேரடியாக கள ஆய்வு செய்யாமலேயே, இந்த உயரழுத்த மின் கம்பியை மாற்றுவதற்கு முயற்சித்த போது, இப்பகுதி பொதுமக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்சார வாரிய உயர் அதிகாரிகளின் உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்ததின் பேரில் இப்பணி நிறுத்தம் செய்யப்பட்டது. தற்பொழுது அதிகரித்துள்ள குடியிருப்பு வாசிக ளின் நலனை கருத்தில் கொண்டு, இந்தப் பணியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இவ்வாறு குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.