தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் அக்டோபர் புரட்சி தின விழா - எழுச்சிப் பொதுக்கூட்டம் சோசலிசமே தீர்வாக மீண்டும் வரும் : எம்.ஏ.பேபி

26 Nov 2025, 3:26 pm
திருப்பூரில் அக்டோபர் புரட்சி தின விழா - எழுச்சிப் பொதுக்கூட்டம் சோசலிசமே தீர்வாக மீண்டும் வரும் : எம்.ஏ.பேபி

திருப்பூரில் அக்டோபர் புரட்சி தின விழா - எழுச்சிப் பொதுக்கூட்டம் சோசலிசமே தீர்வாக மீண்டும் வரும் : எம்.ஏ.பேபி

திருப்பூர், நவ. 24-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்
செயலாளர் எம்.ஏ. பேபி அவர்கள், திருப்பூரில் நவம்பர் 23 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழா - செந்தொண்டர் அணி
வகுப்பு - பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சியின் 108வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்
இக்கூட்டத்தில், மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் போன்ற முற்போக்கு ஆளுமை களுக்கும், தோழர்கள் பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட தியாகிகளுக்கும் செவ்வணக்கம் செலுத்தினார். சோவியத் யூனியனின் சாதனைகள், அதன் வீழ்ச்சி, தற்போதைய உலகச் சூழல் மற்றும் மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள் ஆகியவை குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
அக்டோபர் புரட்சியின் வரலாற்றுத்தாக்கம்
எம்.ஏ. பேபி தனது உரையின் தொடக்கத்தில்,
காலண்டர் வேறுபாடு காரணமாக இந்தப்
புரட்சி ‘அக்டோபர் புரட்சி’ என்று அழைக்கப்பட்டா
லும், அது நவம்பர் 7ஆம் தேதி நடந்ததற்கான
வரலாற்றுப் பின்னணியை விளக்கினார். ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட ஜூலியன் நாட்காட்டிக்கும், உலகளவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட சர்வதேச நாட்காட்டிக்கும் உள்ள வித்தியாசத்தால்,பின்னர் நவம்பர் புரட்சி என்று பெயர் பெற்றதாக அவர் தெளிவுபடுத்தினார்.
சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (USSR)ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக உலகிற்குக் கொண்டு வந்த சோசலிசத்தின் தாக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதன் சரிவுக்கான காரணங்களில், சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்ட சில குழப்பங்கள், ஜனநாயக செயல்பாட்டை உறுதி செய்வதில் ஏற்பட்ட சவால்கள்  மற்றும் வெளிநாட்டு சிஐஏ போன்ற ஏகாதிபத்தியச் சக்திகளின் தலையீடு உள்ளிட்ட பல காரணங்கள் அடங்கும். இந்த அனைத்தையும் 1992இல் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 14ஆவது மாநாட்டில் ஆழமாக ஆய்வு செய்ததாகவும், பல காரணங்களால் சோசலிசம் ஒரு பின்னடைவைச் சந்தித்தது என்ற முடிவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். “ஆனால், சோசலிசத்திற்கான இந்தப் பின்னடைவு தற்காலிகமானது மட்டுமே; அது புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் விரைவில் திரும்பி வரும். 180 ஆண்டுகளுக்குப் பிறகு சோசலிசப் புரட்சியின் வரலாற்று முன்னேற்றத்தை நாம் பார்க்க வேண்டும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
புரட்சியின் மகத்தான
உலகச் சாதனைகள்
ரஷ்ய சோசலிசப் புரட்சி உலக நாகரிகத்திற்கு செய்த மகத்தான பங்களிப்புகளை எம்.ஏ. பேபி பட்டியலிட்டார். புரட்சி வெற்றியடைந்த உடனேயே, அதை நசுக்க முழு உலக முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றிணைந்தன. எனினும், ரஷ்யாவின் 99 சதவீத மக்களின் ஆதரவால் அது உயிர்ப்புடன் திகழ்ந்தது.

1920-1930களில் உலகெங்கும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, பட்டினி நிலவியபோது, சோவியத் யூனியன் ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் படிப்படியாகப் பொருளாதார ரீதியாக முன்னேறியது. உலகமே மந்தநிலையில் இருந்தபோது, சோவியத் யூனியனின் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூடப்பட்டன. இது முதலாளித்துவ நாடுகளுக்கு ஒரு மாபெரும் பாடமாக அமைந்தது.
மனிதன் உருவாக்கிய முதல் செயற்கைக் கோள் ஸ்புட்னிக் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் மற்றும் முதல் பெண் வாலண்டினா டெரஸ்கோவா எனப் பல மகத்தான சாதனைகள் சோவியத் யூனியனால் நிகழ்த்தப்பட்டன.   ரஷ்யப் புரட்சியின் விளைவாகவே பெண்களுக்கு முழு அரசியல் உரிமைகளும், வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்தே அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து முதலாளித்துவ நாடுகளும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உலகச் சூழலும் திருப்பூரில் தாக்கமும்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கட்டுக்கடங்காத அதிகாரத்தை அளித்துள்ளது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தமக்குச் சவால் அளிக்கும் சோவியத் யூனியன் இல்லாததால், ‘வரி பயங்கரவாதம்’ (Tariff Terrorism of Trump - TTT) என்ற பெயரில் வரி விதித்து வருகிறார். சீன மக்கள் குடியரசு மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராக நிற்கிறது.
டிரம்ப்பின் இந்த ‘வரி பயங்கரவாதத்தின்’ நேரடித் தாக்கத்தால், நாட்டின் மிக முக்கிய ஆடை தயாரிப்பு மையமான திருப்பூர் உற்பத்தித் துறையில் கடந்த மூன்று மாதங்களில் ரூ.4,000 கோடிக்கும் மேல் இழப்பைச் சந்தித்துள்ளது என, பேபி விவரித்தார்.

மோடி அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு
நரேந்திர மோடி அரசு நவ பாசிசப் போக்குகளு டன் செயல்படுகிறது என விமர்சித்த எம்.ஏ. பேபி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) தொழிலாளர் வர்க்கத்தின் மீதான நேரடித் தாக்குதல் எனக் கண்டித்தார். இந்தச் சட்டங்களின் மூலம் 29 தொழிலாளர் சட்டங்கள் நான்கு சட்டத் தொகுப்புகளாக குறைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டங்கள் அமலுக்கு வருவதால், இந்தியாவில் உள்ள 90% தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமை மற்றும் தொழிலாளர் சட்டங்களின் பாதுகாப்புக்கு வெளியே வைக்கப்படுவார்கள்.
300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகளுக்கு மட்டுமே சட்டம் பொருந்தும் என்ற விதி, அம்பானி, அதானி போன்ற முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாக தொழிலாளர்களைப் பகுதி நேரப் பணியாளர்களாகக் காட்ட வழிவகுத்து, முதலாளித்துவத்தின் நலனைப் பாதுகாக்கவே கொண்டுவரப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்சின் கட்டுப்பாட்டில் உள்ள பி.எம்.எஸ். தவிர மற்ற அனைத்துத் தொழிற்சங்கங்களும் இதை எதிர்க்கின்றன.

விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வெற்றியடைந்த போராட்டத்தைப் போல, இந்த தொழிலாளர் விரோதச் சட்டங்களையும் திரும்பப் பெற வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும்  தொழிலாளர் வர்க்கமும் எல்லா வகையிலும்  போராடும். நாடாளுமன்றத்திலும், வெளியேயும் டிசம்பர் 1 முதல் போராட்டத்தைத் தொடருவோம் என்று அவர் அறிவித்தார்.
கூட்டாட்சி மற்றும் முற்போக்கு சக்திகள்

மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதலையும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்த முடிவை எதிர்த்துப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஆளுநர்கள் ஒத்துழைப்பு வழங்காமல் காலதாமதம் செய்வது கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு எதிரானது என்றும் அவர் சாடினார். இந்தச் சூழ்நிலையில், ஜனநாயக, மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளை வலுப்படுத்த வேண்டியது உடனடிப் பணி என அவர் அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒரு முக்கியமான மாதிரி என்றும், அதனை வலுப்படுத்த அனைவரும் மக்களைத் திரட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், இடதுசாரிகளின் நிர்வாகத் திறமைக்குச் சான்றாகத் திகழும் கேரளா இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசு தீவிர வறுமையை ஒழித்து, பெண்களுக்கு வீட்டு வேலைக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறி உரையை நிறைவு செய்தார்.

அவரது ஆங்கில உரையை, எஸ்.துரைராஜ் தமிழாக்கம் செய்தார்.
தொகுப்பு : லிவின்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.