அறிவியல் கதிர்
26 Sept 2026, 8:26 pm

அறிவியல் கதிர்

கடல் வெப்பம் சூறையாடும் கடற்பஞ்சு உயிரினங்கள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

கடற்சூழல் மண்டலத்தில் வாழும் கடற்பஞ்சு அல்லது ஸ்பாஞ்சு வகையைச் சேர்ந்த உயிரினங்கள் சூழலைக் காக்கும் பணியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மற்ற கடல் உயிரினங்களை வேட்டையாடுவது போல கடல் வெப்ப உயர்வு இந்த உயிரினங்களையும் பாதிக்கிறது என்று முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 800 வகையான ஸ்பாஞ்சுகள் வாழும் நியூசிலாந்தின் கடலோரப் பகுதியில் வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் சமீபத்தில் இந்த அதிர்ச்சி தரும் உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.

அடர் சாக்லெட் நிறத்தில் பளபளப்புடன் காணப்படும் இவ்வுயிரினங்கள் கடலின் வெப்ப உயர்வினால் எலும்பின் வெண்மை நிறமாக மாறியுள்ளன. ஃப்யோர்லாந்து என்ற இடத்தில் பிரேக்சீ சவுண்ட் மற்றும் டபுட்ஃபுல் சவுண்ட் ஆகிய இடங்களுக்கு அருகில் 12 பகுதிகளில் இது நிகழ்ந்துள்ளது. ஸ்பாஞ்சுகளில் 95% உயிரினங்கள் வெப்ப உயர்வால் நிறமிழந்துள்ளன என்று கடல் உயிரியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜேம்ஸ் பெல் கூறுகிறார்.

2022-ன் தொடக்கத்தில் டாஸ்மேனியாவிலும் இதே போன்ற ஸ்பாஞ்சுகள் நிறமிழந்த சம்பவங்கள் நடந்தன. என்றாலும் அவை பவளங்களைக் காட்டிலும் வெப்ப உயர்வைத் தாங்கக்கூடியவை. பூமியின் எல்லா இடங்களிலும் வெப்பநிலை உயர்ந்தது போலவே நியூசிலாந்திலும் வெப்ப உயர்வு சாதனையளவு உயர்ந்து காணப்பட்டது. ஏப்ரல் 2022-ல் அங்கு கடல் வெப்பநிலை 2.6 டிகிரி செல்சியஸ் வரை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது என்று தேசீய நீர் மற்றும் வாயு மண்டல ஆய்வுமையம் கூறுகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத உயர்வெப்பநிலை தெற்குத் தீவுப் பகுதியில் நிலவியது. நிறமிழந்த சில ஸ்பாஞ்சுகள் மீண்டும் உயிர் பெறலாம். என்றாலும் உயிர் வாழப் போராடிக்கொண்டிருக்கும் இந்த அதிசய உயிரினங்கள் மீண்டும் உயிர் பெறும் என்ற நம்பிக்கையுடன் விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர்.

வானிலையை ஆராய உதவும் ஆளில்லா விமானங்கள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

வானிலை மாற்றங்கள் தரை மட்டத்தில் இருந்து ஒரு சில ஆயிரம் மீட்டர்கள் உயரத்தில் வளிமண்டலத்தின் எல்லையில் உள்ள அடுக்குகளில் நிகழ்கின்றன. ஆனால் இது பற்றி தரையில் இருந்து விரிவாக ஆராய்வது கடினம். இதற்காக விமானங்களை அனுப்பி ஆராய்வதற்கு அதிகச் செலவு ஆகும். கருவிகள் பொருத்தப்பட்ட வானிலை பலூன்களே இதற்கான பாரம்பரியத் தீர்வாக இருந்துவருகிறது. ஒவ்வொரு நாள் வானிலையை ஆராய்வதற்கும் ஆயிரக்கணக்கான பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன.

இதற்கு மாற்றாக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தலாம் என்ற புதியதொரு யோசனையை யு.எஸ்.ஸைச் சேர்ந்த மீட்டியொமேட்டிக்ஸ் என்ற நிறுவனம் ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தில் ஒரு சில திருத்தங்களைச் செய்து வழங்கியுள்ளது. மீட்டியோ தளம் என்று அழைக்கப்படும் இந்தத் தளம் தரையில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஆளில்லா விமானங்களை வானில் செலுத்தி விவரங்களைச் சேகரிக்க முடியும்.

தானியங்கி முறையில் செயல்படும் இதில் சேகரிக்கப்பட வேண்டிய விவரங்கள் முன்கூட்டியே நிரலிடப்பட்டு அனுப்பப்படுகின்றன. வளிமண்டல எல்லையில் வெவ்வேறு உயரங்களுக்குச் சென்று இந்த ஆளில்லா விமானம் தரவுகளைச் சேகரித்துவிட்டு மின்னேற்றம் செய்ய பூமிக்குத் திரும்பிவருகிறது. அப்போது சேகரிக்கப்பட்ட விவரங்களை மீட்டியொமேட்டிக்ஸ் நிறுவனம் பதிவிறக்கம் செய்து வானிலையை ஆராயும் விஞ்ஞானிகளுக்கு அனுப்புகிறது.

இந்தத் தொழில்நுட்பம் தொழிலாளர்களின் தீவிர உழைப்பு மற்றும் அதிக செலவு பிடிக்கக்கூடிய பலூன்கள் ஏவப்படுவதற்குச் சிறந்த மாற்றாக அமைந்துள்ளது. மின்னி மறையும் ஒளியுடன் வானில் வலம் வரும் இவற்றை வருங்காலத்தில் காண்பவர்களுக்குத் தொடர்ந்தும் ஒரு மகிழ்ச்சி தரும் அனுபவமாக இந்த ஆளில்லா விமானங்கள் அமையும்!