தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினம் கடைப்பிடிப்பு

17 Dec 2025, 4:11 pm
தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினம் கடைப்பிடிப்பு
<p><strong>தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினம் கடைப்பிடிப்பு</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, டிச.17 - சுதந்திரப் போராட்ட வீரரும், பெண் ணுரிமை போராளியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபன தலை வர்களில் ஒருவருமான மறைந்த தோழர் பாப்பா உமாநாத்தின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று திருச்சி பொன்மலை சங்கத்திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் கடைப் பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் &nbsp;செயலாளர் கோ.வி.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் &nbsp;உ.வாசுகி, மாநில கட்டுப்பாட்டுக் குழு &nbsp;தலைவர் எஸ்.ஸ்ரீதர், வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி, மாநிலக்குழு உறுப்பி னர்கள் எம்.ஜெயசீலன், ஜான்சிராணி, புறநகர் மாவட்டச் செயலாளர் சிவரா ஜன், மாதர் சங்க மத்தியக் குழு உறுப்பி னர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.கே. பொன்னுத்தாய், மாநிலப் பொருளா ளர் ஜி.ராணி, மாவட்டச் செயலாளர் கள் மல்லிகா, சரஸ்வதி, மாவட்டத் தலைவர் ராஹிலா, மாவட்ட பொரு ளாளர் மாலதி, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் லெனின், ரேணுகா, ரஜினிகாந்த், பகுதி செயலா ளர்கள் விஜயேந்திரன், சுரேஷ், தர்மா, தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் ஜெயபால், மாற்றுத் திறனாளி கள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் &nbsp;சண்முகம், டிஆர்இயு கோட்டத் தலைவர் லெனின், உதவி பொதுச் செயலாளர் சந்தானசெல்வம் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். &nbsp;முன்னதாக தோழர் பாப்பா உமா நாத்தின் நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து, மெளன அஞ்சலி செலுத்தி, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. நாகப்பட்டினம் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா &nbsp;உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.