ஓ.பன்னீர்செல்வத்திற்கு தேனியில் உற்சாக வரவேற்பு
1 Mar 2026, 4:03 pm
<p><strong>ஓ.பன்னீர்செல்வத்திற்கு தேனியில் உற்சாக வரவேற்பு </strong></p>
<p>தேனி, மார்ச் 1- ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தனது சொந்த மாவட்டமான தேனிக்கு முதன் முறையாக வருகை தந்தார். அவருக்கு மாவட்டம் முழு வதும் திமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வர வேற்பு அளித்தனர். மதுரை–தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில், திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதர வாளர்கள் திரண்டு அவரை வரவேற்றனர். பொன்னாடை போர்த்தியும், மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப் பட்டது. தேனி பங்களா மேட்டிலும் திமுக நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு வழங்கினர். பின்னர் போடியில் நடைபெற்ற நிகழ்வில், அவரது ஆதரவா ளர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் ஒன்று திரண்டு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சர வணக்குமார், முன்னாள் எம்.பி.க்கள் எஸ்.பி.எம். சையது கான், ஓ.பி.ரவீந்திரநாத், போடி நகரச் செயலாளர் புரு சோத்தமன், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் தேனி முரு கேசன், வி.ஆர்.பழனிராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.<br />
</p>
