ஓ.எஸ். மணியனிடம் ஒரு ‘பழைய பாக்கி’! மயிலாடுதுறை அதிமுகவில் ஓடும் ‘வசூல் ராஜா’ கதை!
1 Apr 2026, 4:02 pm
<p><strong>ஓ.எஸ். மணியனிடம் ஒரு ‘பழைய பாக்கி’! மயிலாடுதுறை அதிமுகவில் ஓடும் ‘வசூல் ராஜா’ கதை!</strong></p>
<p>சினிமாவில் “பாக்கி வைக்காம பாத்துக்கோ” என்று வசனம் வரும், ஆனால் மயிலாடுதுறை அதிமுகவிலோ “பாக்கியைக் கேட்டாலே பதவி காலி” என்ற புதுவிதமான அரசியல் திரில்லர் ஓடிக் கொண்டிருக்கிறது. வட்டியும் முதலும் வசூல் ஆகுமா? அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜனார்த்தனன் கிளப்பியுள்ள ‘ரூ. 25 லட்சம்’ விவகாரம், மயிலாடுதுறை அதிமுகவை கதிகலங்க வைத்துள்ளது. 2016 தேர்தலுக்காக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு ஜனார்த்தனன் கடன் வாங்கித் தந்தாராம். இப்போது வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகை ரூ. 1.20 கோடியாக எகிறி நிற்கிறது. “காசைக் கொடு” என்று கேட்டால், “கட்சியில் உனக்கு இடமில்லை” என்று முன்னாள் அமைச்சர் கையை விரித்ததாக ஜனார்த்தனன் புலம்புகிறார். விக்கெட்டுகள் விழும் மைதானம்! மயிலாடுதுறையில் அதிமுக ஒரு ‘கிரிக்கெட்’ மேட்ச் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிரணி பந்து வீசாமலேயே இவர்களே ‘ஹிட் விக்கெட்’ ஆகி வெளியேறுகிறார்கள். • பி.வி. பாரதி: முன்னாள் எம்.எல்.ஏ... “எனக்கு மரியாதையில்லை” என்று பேட்டை தூக்கிப்போட்டுவிட்டுப் போய்விட்டார். • செந்தில்நாதன்: “உழைப்புக்கு அங்கீ காரம் இல்லை” என்று அடுத்த விக்கெட்டை பறக்கவிட்டுள்ளார். • ஜனார்த்தனன்: இவரோ ஒரு படி மேலே போய், “மணியன் மற்றும் பவுன்ராஜ் தான் என் விலகலுக்குக் காரணம்” என்று ‘நோ-பால்’ புகாரை வீசியுள்ளார். தேர்தல் செலவா? தனிப்பட்ட கல்லாவா? ஒருபுறம் “பெர்சப்ஷன் போர்” நடத்தத் தயாராகும் அதிமுக, முதலில் சொந்தக் கட்சி நிர்வாகிகளிடம் வாங்கிய கடனைத் தீர்த்தாலே பாதிப் போர் முடிந்துவிடும் போலிருக்கிறது. 2021-இல் டெல்டா மண்டலத்தில் வாங்கிய அடி போதாது என்று, இம்முறை “பண மோசடி” புகார்களுடன் தேர்தல் களத்தில் குதிப்பது அதிமுகவின் ‘இரட்டை இலை’யை இன்னும் கருக வைக்குமே தவிர, துளிர்க்க வைக்காது.</p>
<p> </p>
