முந்தய பக்கம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2 Sept 2026, 10:49 pm
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, செப்.2-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆக.30 ஆம் தேதி நடைபெற்ற கோட்டை முற்றுகை போராட்டத்தின் எழுச்சி நாளை நினைவுகூரும் வகையிலும், சத்துணவு ஊழியர்களின் நியாயமான மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு உடனடியாக வெளியிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் புதனன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தெற்கு ஒன்றியத் தலைவர் தனபாக்கியம் தலைமை வகித்தார்.

இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் சின்ன மாரிமுத்து, வட்ட கிளைத் தலைவர் பத்மநாபன்,செயலாளர் கிட்டு, பொருளாளர் மதியரசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் கீதா, ஒன்றியப் பொருளார் யசோதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram