முந்தய பக்கம்

சத்துணவு ஊழியர் சங்க வட்டார பேரவை

18 Jul 2026, 9:19 pm
சத்துணவு ஊழியர் சங்க வட்டார பேரவை
<p><strong>சத்துணவு ஊழியர் சங்க வட்டார பேரவை</strong></p><p>நத்தம், ஜூலை 18- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் யூனியன் அலுவலகம் அருகே சத்து ணவு ஊழியர் சங்க வட்டார பேர வைக் கூட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் சுந்தரி தலைமை தாங்கி னார். யூனியன் ஆணையாளர் ஜெயக்குமார், வட்டாரச் செயலா ளர் ராஜா, பொருளாளர் விஜய ராணி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ராஜலெட்சுமி வரவேற்றார். சத்துணவு திட்டத்தோடு காலை உணவு திட்டத்தை இணைக்க கோருவது, சத்துணவு ஊழியர்க ளுக்கு கல்வித் தகுதி அடிப்படை யில் பிற அரசு துறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. முன்னாள் செயற்குழு உறுப்பி னர்கள் குப்பான், காட்டுராஜா, முன்னாள் மாவட்ட இணைச் செய லாளர் பாண்டிச்செல்வம், அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் சுந்தரபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram