சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்
20 Jan 2026, 2:46 pm
<p><strong>சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்</strong></p>
<p>சிவகங்கை, ஜன.20- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் வாழ்வாதார கோரிக்கை களை முன்வைத்து, சிவகங்கை யில் சாலை மறியல் மற்றும் காத்தி ருப்பு போராட்டம் திங்களன்று நடை பெற்றது. இதில் ஈடுபட்ட 650 சத்து ணவு ஊழியர்கள் கைது செய்யப் பட்டனர். மாவட்ட தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரேவதி கோரிக் கைகளை விளக்கி உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் லதா முன்னிலை வகித்தார். மறியல் போராட்டத்தை தொட ங்கி வைத்து மாநிலச் செயலாளர் பாண்டியன் பேசினார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மாரி, வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பாலமுருகன், தமிழ்நாடு நில அளவை அலுவ லர்கள் ஒன்றிய மாவட்டச் செயலா ளர் உதயசங்கர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பா.லூயிஸ் ஜோசப் பிர காஷ், சாலை ஆய்வாளர் சங்க மாவட்ட பொருளாளர் முத்தையா, கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்டச் செயலாளர் மரிய அருள் பாண்டியன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மேலும் செல்ல முத்து, நவநீதகிருஷ்ணன், கோபால் ஆகியோரும் போராட்டத் தில் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராதா கிருஷ்ணன் நிறைவுரையாற்றி னார். மாவட்ட பொருளாளர் நாக ராணி நன்றி கூறினார்.</p>
