பேச்சுவார்த்தை தோல்வி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு
19 Jan 2026, 2:23 pm
<p><strong>பேச்சுவார்த்தை தோல்வி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு</strong></p>
<p>சென்னை, ஜன. 19- அரசுடன் நடத்திய பேச்சுவார்த் தையில் முடிவு எட்டப்படாத நிலையில் செவ்வாயன்று முதல் (ஜன.20) வேலைநிறுத்தம் மற்றும் தொடர் மறியலில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம் ஜன.3 அன்று அறிவிக்கப்பட்டது. அதில் சத்துணவு ஊழியர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில், சத்துணவு ஊழியர் களுக்கு காலமுறை ஊதியம், பணிக் கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.20 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று சத்து ணவு ஊழியர் சங்கம் அறிவித்தது. இந்நிலையில் சத்துணவு ஊழியர் சங்கம் மற்றும் போராட்டம் அறிவிக் காத சங்கங்களை அழைத்து ஜன.19 அன்று தலைமைச் செயலகத்தில் சமூக நலத் தலைவர் ஜெயஸ்ரீ முரளி தரன், இயக்குநர் சங்கீதா, இணை இயக்குநர் ஜெயலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், கோரிக்கை களை நிறைவேற்ற அதிகாரிகள் கால அவகாசம் கோரினர். இதனை ஏற்க சத் துணவு ஊழியர் சங்கம் மறுத்துவிட்டது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலா ளர் ஜெசி, “ஜன.20 முதல் திட்டமிட்ட படி வேலைநிறுத்தம் தொடங்கும். ஜன.20-23 ஆகிய 4 நாட்கள் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியலும், ஜன.24-25 ஆகிய தேதிகளில் ஆட்சி யர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்புப் போராட்டமும் நடைபெறும்” என்றார்.</p>
