சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
13 Jan 2026, 3:17 pm
<p><strong>வனப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலை அரிப்பு வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: மலைவாழ் மக்கள் கண்ணீர்</strong></p>
<p>கோபி, ஜன.13- கோபி அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலை அரிப்பு ஏற்பட்டதில், விவ சாயப் பணிகளுக்கு டிராக்டர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தங்களது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு நிவா ரணம் வழங்க வேண்டும் என மலை வாழ் மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட கம்பனூரில் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்ற னர். மலைக்கிராமத்தில் உள்ள பழங் குடியின மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட சுமார் 50 ஏக்கர் பரப் பளவுள்ள விவசாய நிலத்தில் மழைக் காலங்களில் கம்பு, ராகி, சோளம் உள்ளிட்ட தானிய வகைகளை பயி ரிட்டு பொங்கலுக்கு முன்னர் அறு வடை செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கம்பனூர் மலைகிராம மக்கள் வடகிழக்கு பருவழைக்கு முன்னதாக தங்க ளது விவசாய நிலங்களில் நிறைந் திருந்த செடி, கொடி, கற்களை அகற்றவும், நிலத்தை சமதளப்படுத் துவதற்காக தனியார் நிதி நிறுவன குழுக்கள் மூலமாக கடனுதவி பெற்று விவசாய நிலங்களை தயார் படுத்தி வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையால், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டாறுகளில் ஏற் பட்ட வெள்ளப்பெருக்கால், விளாங் கோம்பை - கம்பனூர் மலைகிராமம் செல்லும் சாலையில் பல்வேறு இடங் களில் அரிப்பு ஏற்பட்டது. சாலையை உடனடியாக சீரமைக்காததால் கம்பனூர் மலைக்கிராமத்தில் உழவுப்பணிகளை மேற்கொள்ள டிராக்டர் வாகனங்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயம் செய்து உணவு தேவைக்கு போக, மீதத்தை டி.என்.பாளையம், சத் தியமங்கலம், அந்தியூர், கோபி உள் ளிட்ட சந்தைகளில் வியாபாரம் செய்து வருவாயை ஈட்டி வந்த னர். ஆனால் இந்தாண்டு வெள் ளப்பெருக்கால் சாலை அரிப்பு ஏற்பட்டதால், விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கம்பனூர் மலைகிராம பழங் குடி மக்களுக்கு நிவாரண உத வித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
