தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சத்துணவு ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

12 Jan 2026, 4:44 pm
சத்துணவு ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
<p><strong>சத்துணவு ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு</strong></p> <p>தருமபுரி, ஜன.12- சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் தேர் தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்றக்கோரி ஜன.20 முதல் &nbsp;வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள &nbsp;நிலையில், அதற்காக ஆயத்த &nbsp;மாநாடு தமிழ்நாடு முழுவதும் நடை பெற்றது. சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண் டும். ஐந்தாண்டு பணி முடித்த சமை யல் உதவியாளர்களுக்கு உடனடி யாக சமையலராக பதவி உயர்வு வழங்க வேண்டும். குடும்ப பாது காப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. &nbsp;9000/- வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 20 ஆம் முதல் தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தி னர் காலவரையற்ற வேலை நிறுத் தத்தில் ஈடுபட உள்ளனர். அதனையொட்டி திங்களன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சத் துணவு ஊழியர் சங்கம் சார்பில் கால வரையற்ற வேலை நிறுத்த ஆயத்த &nbsp;மாநாடு நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக தருமபுரி ஆர்டி நகரில் நடைபெற்ற ஆயத்த &nbsp;மாநாட்டிற்கு சங்க மாவட்டத் தலை வர் கே.தேவகி தலைமை வகித்தார். &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ஜெயா வரவேற்றார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் &nbsp;தலைவர் எம். சுருளி நாதன் துவக்க வுரையாற்றினார். சங்க மாவட்டச் செயலாளர் பெ. மகேஸ்வரி, மாவட்டப் பொருளாளர் பி. வளர் மதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஜாக்டோ ஜியோ நிதி காப்பா ளர் கே. புகழேந்தி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.பி.தங்க ராஜ் நிறைவுறையாற்றினார். இதில் &nbsp;ஏராளமானோர் கலந்து கொண்ட னர். ஈரோடு ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு &nbsp;அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் &nbsp;நடைபெற்ற மாநாட்டிற்கு, சங்க &nbsp;மாவட்டத் தலைவர் ஆர்.தமிழ்ச் செல்வி தலைமை வகித்தார். யு.பழனிச்சாமி, கே.இந்திராணி, கே.பழனியம்மாள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில &nbsp;செயற்குழு உறுப்பினர் ஆர்.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட துணைத் தலைவர் பி. விஜயன் வரவேற்றார். அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். விஜயமனோகரன் துவக்கவுரை யாற்றினார். சங்க மாவட்டச் செய லாளர் வி.லோகநாயகி கோரிக்கை களை விளக்கிப் பேசினார். தொழிற் பயிற்சி அலுவலர் சங்க மாநிலத் &nbsp;தலைவர் மு.சீனிவாசன் உள்ளிட்ட &nbsp;சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த் திப் பேசினர். மாநிலச் செயலாளர் &nbsp;எம்.கண்ணன் நிறைவுரையாற்றி னார். இறுதியாக மாவட்டப் பொரு ளாளர் கே.பாப்பாத்தி நன்றி கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.