தொடர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு
22 Jan 2026, 2:57 pm
<p><strong>தொடர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு</strong></p>
<p>சென்னை, ஜன. 22 - தொடர் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகிய தேர்தல் வாக்கு றுதிகளை நிறைவேற்ற தமிழக அரசை வலி யுறுத்தி ஜனவரி 20 அன்று சத்துணவு ஊழி யர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். மாவட்டத் தலைநகரங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, “சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றி வரும் பணி யாளர்களின் சிறப்பு ஓய்வூதியம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து உரிய ஆணைகளை விரைவில் வெளியிடும்” என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு தெரிவித்தது. ஏற்கெனவே துறை அமைச்சர் மற்றும் பேச்சுவார்த்தை நடத்திய துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோரும் நம்பிக்கையூட்டும் வாக்குறுதியை அளித்திருந்தனர். எனவே, அரசின் மீதுள்ள நல்லெண்ணம், மாணவர்களின் நலன் கருதி வேலைநிறுத்தம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்படுகிறது. முதல்வர் அறிவிப்பு தாமதமானால் ஜன வரி 27-ஆம் தேதிக்கு பிறகு வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. செல்லத்துரை, பொதுச்செயலாளர் ஏ.ஜெசி, பொருளாளர் வி. சித்ரா ஆகியோர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.</p>
