சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
5 Jan 2026, 6:21 pm
<p><strong>சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கோவை, ஜன.5- சத்துணவு அங்கன்வாடி ஓய்வூ தியர்களுக்கு குறைந்தபட்ச மாதாந் திர ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து சத்து ணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங் கத்தினர் மாநிலம் முழுவதும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கி பணிக்கொடை வழங்க வேண்டும். மருத்துவப் படி மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தி னர் திங்களன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்க மாவட்டத் தலைவர் கே. என்.ராமசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் கே. பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜ கோபால் ஆகியோர் கோரிக்கை கள் குறித்து உரையாற்றினர். இதில், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.லதா, கால் நடை ஆய்வாளர்கள் சங்க முன் னாள் பொதுச் செயலாளர் பொன். கருணாநிதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் எஸ்.சாரதாமணி நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்டத் தலைவர் பி.மல்லிகா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலை வர் சி.அங்கம்மாள், மாவட்டப் பொருளாளர் சி. கருணாநிதி, மாவட்ட நிர்வாகிகள் சி.பாபு, எம். சிந்தன், சாரதாம்பாள், ராணி, ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அனைத்துதுறை ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செயலாளர் எம். பெருமாள், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, ஆகி யோர் வாழ்த்தி பேசினர். ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் தமிழ்நாடு பள்ளி சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதி யர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் சம்பத் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ராஜன் மற்றும் பொரு ளாளர் மணிமாலை உள்ளிட்ட திர ளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.</p>
