தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

13 Nov 2025, 3:30 pm
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!
<p><strong>கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!</strong></p> <p>கோவை, நவ.13- பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, சத்து ணவு ஊழியர்கள் சங்கத்தி னர் கோவை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலு வலகத்தை முற்றுகையிட்டு புதனன்று இரவு முழுவ தும் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். நள்ளிர வில் மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு, கோரிக்கைகளை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். சமையல் உதவியாளர்களுக்கு சமைய லர்களாகவும், சமையலர்களுக்கு அமைப் பாளர்களாகவும் நீண்ட நாட்களாக நிலுவை யில் உள்ள பணி மாறுதலை உடனடியாக அமல்படுத்துவது, அத்துடன் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் நிறைவடைந்த தொழிலாளர்களுக்குத் தேக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு களை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட &nbsp;கோரிக்கைகள் தொடர்ந்து சத்துணவு ஊழி யர் சங்கத்தினரால் வலியுறுத்தப்பட்டு வருகி றது. இரண்டு ஆண்டுகாலப் போராட்டத் திற்கு பிறகும், இவ்வூழியர்களை அலை கழிக்கும் போக்கு தொடர்கிறது. இதனையடுத்து, புதனன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநிலத் தலை வர் செல்லதுரை, பொதுச் செயலாளர் ஜெசி, மாவட்ட பொறுப்பாளர் கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் பானு லதா, லதா, சுதா உள் ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோவை &nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவல கத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து பேசிய சங்கத்தின் முன் னாள் தலைவர் கே.பழனிச்சாமி, &ldquo;கடந்த அக்.8 ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங்க ளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, நேர்முக உதவியாளர் வரும் அக். 17ஆம் தேதிக்குள் அனைத்துக் கோரிக் கைகளையும் நிறைவேற்றுவதாகக் கூறி உறுதியளித்து கடிதம் வழங்கினார். ஆனால், அக்டோபர் 24ஆம் தேதியன்று கேட்டபோதும், பணிகள் நடைபெற்று வருவ தாக கூறி அலைக்கழிக்கிறார். இதைத் தொடர்ந்து, புதனன்று அழைக் கப்பட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தத் தீர்வும் &nbsp;எட்டப்படவில்லை. எனவே, கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் கலைய மாட்டோம் எனக் கூறி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். மாவட்ட ஆட்சியர் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத தால், மாவட்ட ஆட்சியர்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறிவிட்டார். எனவே, எங்க ளின் போராட்டத்தை இரவிலும் தொடர்ந் தோம், என்றார். இதனிடையே, புதனன்று இரவு முழுவ தும் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்த நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கா. கிரியப்பனவர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை ஒரு வாரத்திற்குள் நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். ஆட்சியரின் உறுதியை ஏற்று, நிர் வாகிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.