உணவியல் கண்காட்சி
15 Nov 2025, 4:09 pm
<p><strong>உணவியல் கண்காட்சி</strong></p>
<p>ஈரோடு, நவ. 15- ஈரோட்டில் சனியன்று நபி வழியில் உணவியல் கண்காட்சி நடைபெற்றது. ஈரோடு ஜவான் பவன் அருகே உள்ள ஹிதாயத்துந் நிஸ்வா னில் சனியன்று நடைபெற்ற உணவியல் கண்காட்சிக்கு மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் பைஜுர் ரஹ் மான் பாகவி தலைமை வகித்தார். கே.இஸாரத்தலி வர வேற்றார். முத்தவல்லி கேஏஎஸ்.சமீம் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனிபா ஹஸனி அறிமுக உரையாற்றினார். மதரசா அமைந்துள்ள கட்டட உரிமையாளர் விநாயகமூர்த்தி வாழ்த்திப் பேசி னார். துரித உணவுகளினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதன் தீர்வுகள், இயற்கை மருத்துவம் சார்ந்த உணவுகள், உடற்பயிற்சியின் முக்கியத்துவம், வீட்டு பொருட்களை பரா மரிக்கும் எளிய முறைகள், இலவச மருத்துவ ஆலோசனை, ஊட்டசத்து மற்றும் ரத்தசோகை விழிப்புணர்வு, சத்தும் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.</p>
<p> </p>
