மணிமுத்தாறு மலை அடிவாரத்தில் விதைப்பந்து வீச்சு நிகழ்ச்சி நர்சிங் கல்லூரி மாணவிகள், காவல்துறையினர் பங்கேற்பு
18 Feb 2026, 3:04 pm

மணிமுத்தாறு மலை அடிவாரத்தில் விதைப்பந்து வீச்சு நிகழ்ச்சி நர்சிங் கல்லூரி மாணவிகள், காவல்துறையினர் பங்கேற்பு

தென்காசி, பிப்.18- நேரு நர்சிங் மாணவிகள், செவிலியர்கள், டிரஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்த பத்தாயிரம் விதைப்பந்துகளை மணி முத்தாறு பட்டாலியனுக்கு கொண்டு வந்து நேரு நர்சிங் கல்லூரியில் ஒப்ப டைத்தனர். ஊசி, மாத்திரை, மருத்துவ உபகரணங்களை கையாளும் நர்சிங் மாணவியர் கைகள் செய்த விதைப்பந்துகளை துப்பாக்கி, லத்தி பிடிக்கும் காவல்துறையின் இரும்பு கரங்கள் இணைந்து மணி முத்தாறு பொதிகை மலை அடிவாரத்தில் விதைப் பந்துகள் வீசப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு மணி முத்தாறு தமிழக சிறப்பு காவல் படை 9ஆவது அணி யின் கமாண்டண்ட் கார்த்தி கேயன் தலைமை தாங்கி னார். துணைதளவாய் வி.எஸ். தீபா முன்னிலை வகித்தார். உதவிதளவாய் கள் குமார் மற்றும் ஸ்ரீதேவி, நேர்துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், ஆய்வாளர் பூதப்பாண்டி, நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். ஹவில்தார் மைமூன் வர வேற்றார்.வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரிமுதல்வர் மார்கரட் ரஞ்சிதம் நிகழ்வை துவக்கி வைத்து பேசி னார். “ஒரு கோடி விதைப் பந்துகள் திட்ட கர்த்தா வெங்காடம்பட்டி பூ.திரு மாறன், நிகழ்வில் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார். எத்தனை ஆயிரம் விதைப்பந்துகள் என்றாலும் அதை மரம் ஆக்குவோம், இயற்கைக்கு வலிமை சேர்க்க எத்தனை ஆயிரம் விதைப்பந்துகள் என்றாலும் பள்ளிகல்லூரிகள் கொண்டு வரலாம், போலீஸ் பட்டாலி யன் கதவுகள் திறந்தே உள்ளன என மணிமுத்தாறு தமிழக சிறப்புகாவல் படை 9ஆவது அணியின் கமாண்டண்ட் கார்த்தி கேயன் அறிவித்துள்ளார். இந்தநிகழ்ச்சியில் நர்சிங் மாணவிகளுக்கும், பட்டா லியன் காவலர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. . நர்சிங் மாணவிய ருக்கு இது ஒருபுது அனு பவமாக இருக்கிறது என மாணவிகள் தெரிவித்தனர். இதுவரை 54 லட்சத்து 10 ஆயிரம் விதைப்பந்துகள் செய்து எறியப்பட்டுள்ளதாக திருமாறன் தெரிவித்தார். பட்டாலியன் அவில்தார் ராஜேஸ்வரி, முருகேஷ், எட்வின் ஜோஸ் நர்சிங் மாணவிகளை உற்சாகப் படுத்தினர். நேருநர்சிங் கல்லூரிசேர்மன் வள்ளியூர் லாரன்ஸ் வாழ்த்து தெரி வித்தார்.