முந்தய பக்கம்

திருவாரூரில் 3 ஆவது நாளாக செவிலியர்கள் போராட்டம்

21 Dec 2025, 3:21 pm
திருவாரூரில் 3 ஆவது நாளாக  செவிலியர்கள் போராட்டம்
<p><strong>திருவாரூரில் 3 ஆவது நாளாக &nbsp;செவிலியர்கள் போராட்டம்</strong></p> <p>திருவாரூர், டிசம்பர்.21- &nbsp;திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி தலைமையில் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் 3 ஆம் நாளாக ஞாயிறன்று நடைபெற்றது. &nbsp;ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்ட களத்திற்கு சென்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுதாகர், மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகி தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர், செவிலியரின் கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி உரையாற்றினர். &nbsp;மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் நிறைவு உரையாற்றினார். போராட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram