முந்தய பக்கம்

5 ஆவது நாளாக செவிலியர்கள் பணி புறக்கணிப்பு தொடர் காத்திருப்பு போராட்டம்

23 Dec 2025, 4:05 pm
5 ஆவது நாளாக செவிலியர்கள் பணி புறக்கணிப்பு தொடர் காத்திருப்பு போராட்டம்
<p><strong>5 ஆவது நாளாக செவிலியர்கள் பணி புறக்கணிப்பு தொடர் காத்திருப்பு போராட்டம் </strong></p> <p>தூத்துக்குடி, டிச.23- தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் 5-ஆவது நாளாக பணி புறக்க ணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். &nbsp;தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் 10 -அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி சென்னையில் கடந்த ஆறு &nbsp;நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனை வரும் ஒன்று கூடி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டத்தினை கடந்த 5-நாட்களாக நடத்தி வரு கின்றனர். இந்த போராட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சுமார் 100- க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவி லியர்கள் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 6-ஆவது நாளாக மருத்துவ சேவை பாதிக்கப்பட்டு நோயாளிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சென்னையில் அமைதியான முறையில் யாருக்கும் எந்த தொந்தரவு அளிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவி லியர்களை முறையற்ற வகையில் கைது செய்து இருப்பது கண்டனத்திற்குரியது என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய செவிலியர்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram