முந்தய பக்கம்

அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது

22 Dec 2025, 2:53 pm
அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி  செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது
<p><strong>அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி &nbsp;செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது</strong></p> <p>செங்கல்பட்டு, டிச. 22 - தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி, 5ஆவது நாளாக திங்களன்றும் (டிச.22) செவிலியர்கள் போராட்டம் நீடித்தது. மாநிலத் தலைவர் கு. சசிகலா, பொதுச் செயலாளர் நே. சுபீன் தலைமையில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், திங்களன்று (டிச.22) காலை 8 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளா கத்தில் சங்கத் தலைவர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. கோரிக்கைகள் தொடர்பாக அரசிடமிருந்து சாதகமான பதில் வராத காரணத்தால் போராட்டம் தொடரும் என்று சங்கத்தலைவர்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram