முந்தய பக்கம்

ஒப்பந்த முறையை ரத்து செய்யக்கோரி செவிலியர்கள் தர்ணா!

20 Nov 2025, 3:46 pm
ஒப்பந்த முறையை ரத்து செய்யக்கோரி  செவிலியர்கள் தர்ணா!
<p><strong>ஒப்பந்த முறையை ரத்து செய்யக்கோரி &nbsp;செவிலியர்கள் தர்ணா!</strong></p> <p>சென்னை, நவ. 20 - ஒப்பந்த முறையை ரத்து &nbsp;செய்து, தொகுப்பூதிய செவிலி யர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி வியாழனன்று (நவ.20) ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை- 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலி யர்கள் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் என்ற தேர்தல் வாக்கு றுதியை நிறைவேற்ற வேண்டும். எம்.ஆர்.பி. தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப் பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்திய &nbsp;பொதுசுகாதார தரநிலை (ஐபிஎச் எஸ்) மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) விதிப்படி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதிய செவிலியர் களுக்கு மகப்பேறு விடுப்பு கொடுக்க வேண்டும். 11 மாத கால ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் &nbsp;என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி &nbsp;தமிழ்நாடு செவி லியர்கள் மேம்பாட்டுச் சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. இதன் ஒருபகுதியாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா நடைபெற்றது. போராட்டத் திற்கு மாவட்டத் தலைவர் எஸ். அமுதா தலைமை தாங்கினார். அரசு &nbsp;ஊழியர் சங்க வடசென்னை மாவட்ட செயலாளர் ம. அந்தோணி சாமி போராட்டத்தை தொடங்கி வைத் தார். மாநில பொதுச்செயலாளர் நே. சுபின், பொருளாளர் ச.ஹேமச் சந்திரன், மாவட்ட பொருளாளர் ஆ. சாம்ஸ்டெல்லா உள்ளிட்ட தோழமைச்சங்கத் தலைவர்கள் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram