தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பணிநிரந்தரம் கோரி போராடிய தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையில் கைது!

18 Dec 2025, 4:38 pm
பணிநிரந்தரம் கோரி போராடிய தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையில் கைது!
<p><strong>பணிநிரந்தரம் கோரி போராடிய தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையில் கைது!</strong></p> <p>சென்னை, டிச. 18 - பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொகுப்பூதிய செவிலியர்கள் வியாழனன்று (டிச.18) சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். எம்ஆர்பி தேர்வெழுதி தொகுப் பூதிய முறையில் தேர்வான செவிலி யர்களில் சுமார் 8 ஆயிரம் பேர் நிரந்த ரம் செய்யப்படாமல் உள்ள நிலை யில், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி அவர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம &nbsp;ஊதியம் வழங்க வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அரசு செய்துள்ள மேல் முறையீட்டை திரும்பப்பெறவேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், கொரோனா காலத்தில் பணி செய்து, பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் அனை வருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் இந்த உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செய லாளர் நே.சுபின், &ldquo;அரசு மருத்துவ மனைகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் &nbsp;தொகுப்பூதிய செவிலியர்கள் உள்ள னர். கிராமப்புறங்களில் உள்ள 3 ஆயிரத்து 500 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு நிரந்தர செவி லியர் கூட கிடையாது. மக்கள் தொகை, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுமார் 30 ஆயிரம் செவிலியர் பணியிடங்களை அரசு உருவாக்க வேண்டியுள்ளது&rdquo; என்றார். சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை தமிழ்நாடு ஆய்வக நுட்பனர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. செல்வராணி தொடங்கி வைத்தார். சிஐடியு மாநி லப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் &nbsp;சங்கத்தின் முன்னாள் பொதுச்செய லாளர் மு. அன்பரசு, தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் உள்ளிட்ட தோழமைச் சங்கத் தலைவர்கள் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். இதனிடையே &nbsp;தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் தீர்வு ஏற்படாததைத் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து &nbsp;சங்கத்தின் மாநில பொருளாளர் ச.ஹேமச்சந்திரன் மற்றும் செவி &nbsp;லியர்களை போலீசார் கைதுசெய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.