அவிநாசியில் செவிலியர்கள் போராட்டம்
19 Dec 2025, 6:05 pm
<p><strong>அவிநாசியில் செவிலியர்கள் போராட்டம்</strong></p>
<p>அவிநாசி டிச.19- செவிலியர்கள், தொகுப்பூதிய பணியா ளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, அவி நாசி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் பாண்டியம்மாள் தலை மையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், செவிலியர்கள், தொகுப்பூதிய பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் நீக்கப்பட்டவர்க ளுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு, மகப்பேறு விடுப்பு, செவிலியர் கல்லூரிகள் உருவாக்கு தல் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங் குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத் தப்பட்டன. இதில் தமிழ்நாடு சமூகநலத்துறை பணி யாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் விஷ்ணு வர்தன், செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலைவர் மீனா, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராமன், வட்டக் கிளைச் செயலாளர் கருப்பன், பொறுப்பாளர் சண்முகசுந்தரம், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைக்குழு மகளிர் அமைப்பாளர் அண் ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
