கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்
22 Dec 2025, 4:02 am

செவிலியர்கள் 4 ஆவது நாளாக காத்திருப்புப்போராட்டம்

சேலம், டிச.22- செவிலியர்கள் 4 ஆவது நாளாக காத்திருப்புப்போராட்டத் தில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் செவிலியர்கள் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திங்க ளன்று 4 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது. சேலம் மாவட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவனை முன்பாக நடை பெற்ற காத்திருப்புப்போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பு.சுரேஷ் மற்றும் வாலிபர், மாண வர் சங்கம் உள்ளிட்ட சகோதர சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். கோவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் செவிலியர்கள் கை குழந்தைகளுடன் பங்கேற்று வருகின்றனர். இப்போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ரவி, மாவட்டச் செயலாளர் ஜெகநாதன், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் ஊதிய சங்க மாநிலச் செயலாளர் கே.பழனிச்சாமி மற்றும் மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சகோதர சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்தி உரையாற்றினர்.

நீலம்பூரில் புதிய காவல் நிலையம் திறப்பு

கோவை, டிச.22– நீலம்பூரில் புதிய காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவை மாநகர எல்லையோரப் பகுதிகளில் அதி கரித்துள்ள மக்கள் தொகை அடர்த்தி மற்றும் தொழிற்சாலை களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்புக்காக நீலம்பூர் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திங்களன்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வழியாக தொடங்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை மேற்கு மண்டல இயக்குநர் செந்தில்குமார், கோவை சரக காவல் துணைத் தலைவர் வி. சசிமோகன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. கார்த்திகேயன், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராகவன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்துகொண்ட னர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்த புதிய காவல் நிலையம் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 19 காவலர்கள் என மொத்தம் 20 பணி யாளர்களுடன் திங்கள் முதல் செயல்படத் தொடங்கியுள் ளது. காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். முழுமையாக இயங்கும்போது இக்காவல் நிலையத்தில் ஒரு காவல் ஆய்வாளர், மூன்று உதவி ஆய்வாளர்கள் மற்றும் 46 காவலர்கள் என மொத்தம் 50 பணியிடங்கள் இருக்கும். நீலம்பூர் காவல் நிலையம் முத்துகவுண்டன் புதூர், நீலம்பூர், ராசிபாளையம், மயிலம்பட்டி, அரசூர், வெள்ளணைப்பட்டி, நாரணபுரம், பச்சாபாளையம் ஆகிய 8 தாய்கிராமங்கள் மற் றும் 23 துணை குக்கிராமங்களை உள்ளடக்கி செயல்படும். இந்த புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டதன் மூலம், இப்பகுதி மக்கள் தங்கள் புகார்களை மிக அருகிலேயே பதிவு செய்து விரைவான நிவாரணம் பெறும் வசதி கிடைத்துள் ளது. மேலும், குற்றச்செயல்களை தடுப்பதற்கும், சட்டம் – ஒழுங்கை வலுப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவும். ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் உதவி வழங்கும் வகையில் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த காவல் நிலையம் செயல்படும் என்றார்.

தற்கொலை முயற்சி

கோவை, டிச.22- கோவை ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்க வந்த தம்பதி திடிரென தற் கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்க ளன்று ஆட்சியரிடம் வீட்டு மனை பட்டா பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க வந்த தம்பதியினர் திடிரென தாங்கள் மறைத்து வைத் திருந்த மண்ணென்னை பாட் டிலை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது போலீசார் தண் ணீர் ஊற்றி இருவரையும் மீட்டுனர். விசாரணையில், கடந்த 2022 இல் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு, வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா எண்ணில் சிறிய மாற்றம் இருந்ததால் அதனை வேறு நபர்கள் அப கரிக்க முயல்வதாகவும், அதனை மீட்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்த னர்.

இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள்

திருப்பூர், டிச.22- அரையாண்டு விடுமுறையை ஒட்டி திருப்பூரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் டிச.23 மற்றும் டிச.24 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள் ளன. தமிழக முழுவதும் பள்ளிகளுக்கு வரும் டிச.24 ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மேலும், அரையாண்டு விடுமுறை காலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத் தாண்டு பண்டிகைகள் வருகின்றன. இதனால், கூட்ட நெரிச லைத் தவிர்க்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் கோவில்வ ழியில் உள்ள தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையத்தி லிருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை காட்டிலும் கூடுதலாக 55 முதல் 60 பேருந்துகளும் இயக்கப்பட வுள்ளன. சேலம், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வகையில் கலைஞர் கரு ணாநிதி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக 15 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பெருமாநல்லூர் சாலை யில் உள்ள தீரன் சின்னமலை பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்க ளுக்கு கூடுதலாக 25 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் டிச.23 மற்றும் டிச.24 ஆம் தேதிகளில் இயக் கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரையாண்டு விடுமுறைக்குப் பின் திரும்பி வர ஏதுவாக சிறப்பு பேருந்துகளும், சென்னையில் இருந்து திருப்பூர் திரும்பி வர ஏதுவாக 30, 31 ஆகிய இரு தேதிகளில் கூடுதலாக 4 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை பொறுத்து மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்க தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அலுவ லர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

திருப்பூர், டிச.22 - விசைத்தறித் தொழிலை நவீன தொழில்நுட்பத்துடன் மேம் படுத்துவதற்கு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. ரேப்பியர் தறி உபகரணங்கள் பெறுவதற்கு விசைத்தறி யாளர்கள் இணையதளத்தில் அதற்கான பதிவினை பதிவு செய்வதற்கு, விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டத்திற்கு இணையவழி விண்ணப்பிக்கும் இணைப்பு https://tnhand looms.tn.gov.in/pms இல் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய சாதாரண விசைத்தறிகளை நவீன ரேப்பியர் நாடா இல்லா தறிகளாக மாற்றுவதற்கு அரசு 50 சதவீத மானியம் அல்லது ரூ.1 லட்சம் இதில் எது குறைவோ அத்தொகையை ஒரு பயனாளிக்கு அதி கபட்சம் 10 தறிகள் வீதம் 300 பயனாளிகளுக்கு 3000 தறிகளை மேம்படுத்த வழங்கப்படும். புதிய ரேபியர் தறிகள் வாங்க, அல்லது பழைய குறைந்த வேகமுள்ள ரேப்பியர் தறிகளை மாற்றி புதிய தறிகள் வாங்கு வதற்கு 20 சதவீத மானியம் அல்லது ரூ.1,50,000/- இதில் எது குறைவோ அத்தொகையை ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 5 தறிகள் வீதம் 200 பயனாளிகளுக்கு வருடத்திற்கு 1000 தறிகள் வாங்குவதற்கு மானியம் வழங்குதல், பொது வசதி மையம் அமைக்க ஏதுவாக வார்ப்பிங் (ம) சைசிங் யூனிட் தர ஆய்வு கூடங்கள், மாதிரி உற்பத்தி மையம் மற்றும் வடிவமைப்பு ஸ்டுடியோ போன்றவற்றிற்கு 25 சதவீத மானியமாக ரூ. 60 லட்சம் வீதம் 8-10 யூனிட்கள் அமைக்க ரூ.5 கோடி அளவிற்கு மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது.

உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்தில் புதிய காவல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை

உடுமலை, டிச.22- உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்தில் புதிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ஒன்றியத்தில் புதிய காவல் நிலை யங்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை ஒன்றியத்தில் எரிசனம்பட்டி யில் புதிய காவல் நிலையம் அமைத்தால் அரு கில் இருக்கும் வல்லகுண்டாபுரம், கொடிங்கி யம், தேவனூர்புதூர், ஆண்டியூர், செல்லப் பம்பாளையம், உடுக்கம்பாளையம் மற்றும் சாளையூர் உள்ளிட்ட பெரிய ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஏற்கனவே இம்மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் உள்ள தளி காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், தளியில் காவல் நிலையத்தின் எல்லையில் பேரூராட்சி மற்றும் அதிக ஊராட்சிகள் இருப் பதால் அங்கு வரும் மக்களுக்கு உரிய நேரத் தில் வழக்குகள் தீர்வு காண முடியாத நிலை உள்ளது. எனவே எரிசனம்பட்டியில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். அதே போல் குடிமங்கலம் ஒன்றியத்தில் திருப்பூர் சாலையில் காவல் நிலையம் உள்ள தால், மேற்கு பகுதியான பெதப்பம்பட்டியில் காவல்நிலையம் அமைத்தால் அந்தியூர், பண்ணை கிணறு, கொங்கல் நகரம், அடி வள்ளி, புதுப்பாளையம், வல்லக்குண்டா புரம், அணிக்கடவு மற்றும் மூங்கில்தொழுவு உள்ளிட்ட ஊராட்சிகளில் வசிக்கும் மக்க ளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் இரண்டு காவல் நிலை யங்களை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

15 பைசா உயர்வு – உச்சம் தொடும் முட்டை விலை

நாமக்கல், டிச.22- நாமக்கல்லில் கடந்த மூன்று நாட்களில் படிப்படி யாக 15 பைசா வரை முட்டை விலை உயர்வு ஏற்பட்டு தற்போது முட்டை கொள்முதல் விலையாக ரூ.6.40 காசு கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் முட்டை விலையில் வரலாறு காணாத உயர்வு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது. நாமக்கல்லில் தினமும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் முட்டை விற்பனை நடைபெறும். கடந்த சில வாரங்க ளாக இதுவரையிலும், இல்லாத வகையில் முட்டை விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரத்தில் ரூ.6.20 பைசாவிற்கு கொள்முதல் விலையில் முட்டை விற்கப்பட்டது. அதிகபட்ச விலை உயர்வாக இது கூறப்பட்ட நிலையில், தற்போது முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40 காசுகளாக உயர்ந் துள்ளது. இது முட்டை பிரியர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோழி பண்ணையாளர்களிடம் இருந்து முட்டைகளை வாங்கி அதை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் தற்போது ஏழு ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை விலை வைத்து ஒரு முட்டையை விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு உள் ளிட்ட தேவைகளுக்காக அதிகம் கேக்குகள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், கேக்குகள் தயாரிப் புக்கு முட்டை மிக முக்கியப் பொருளாக இருப்பதால் முட்டை விலையில் இன்னும் உயர்வு இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டை விலையின் காரணமாக முட்டைகளை பயன்படுத்தி உணவுகளை தயார் செய்யும் சாலை யோர கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் முட்டை சார்ந்த உணவுப் பொருட்கள் விலையை கட்டா யம் அதிகரித்தே தீர வேண்டிய சூழ்நிலைக்கு வியா பாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிமுகவை கைப்பற்றவே விஜய் முயற்சி ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேட்டி

நாமக்கல், டிச.22- தமிழகத்தில் அதிமுகவை கைப்பற்றவே நடிகர் விஜய் முயற்சி மேற்கொண்டு வருவதாக கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ செய்தியாளர்களி டம் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் புதிய அலுவ லகத்தினை முதல்வர் மு.க ஸ்டாலின் திங்களன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பங்கேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி யின் பொதுச்செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் காவலர் பற்றாக்குறை இருப்பது. ஓர ளவுக்கு உண்மைதான். பற்றாக்குறை நிலவுவதை சரி செய்வதற்காக தற்போது காவலர்களுக்கான தேர்வு கள் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் போதிய காவ லர்களை அரசு நியமிக்கும் என நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக் கவில்லை, அதிமுகவின் இடத்தை கைபற்றவே விஜய் முயற்சி செய்து வருகின்றனர். எனவே விஜய்யை பார்த்து அதிமுக தான் பயப்பட வேண்டும். திருச் செங்கோடு சட்டமன்றத் தொகுதி வளர்ச்சி பெற வில்லை என பாஜகவினரும் தவெகவினரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்கள் என்னுடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு வந்தால் அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார்.