முந்தய பக்கம்

தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி செவிலியர்கள் போராட்டம்

19 Dec 2025, 6:05 pm
தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி செவிலியர்கள் போராட்டம்
<p><strong>தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி செவிலியர்கள் போராட்டம்</strong></p> <p>விருதுநகர், டிச.,19- தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதி 356 ஐ உடனடியாக &nbsp;நிறைவேற்ற வேண்டும் என்று &nbsp; &nbsp;வலி யுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத் தின் சார்பில் &nbsp;சென்னை, சேப்பாக்கத்தில் &nbsp; உண்ணா விரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போராட்டத் தை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். எனவே, &nbsp; &nbsp;தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. &nbsp; இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி இணை இயக்குநர் அலுவலகம் முன்பு செவி லியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத் தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கா.கருப்பையா, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட நிர்வாகி எம்.கோட்டைராஜன் ஆகியோர் ஆதரித்து பேசினர். &nbsp;இராமநாதபுரம் &nbsp; இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் முன்பு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு போராட் டம் மாவட்டத் தலைவர் ஆரோக்கிய பிரமிளா தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தன லட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் தீபாலட்சுமி, லதா, கலை வாணி, அனிதா ஆகியோர் உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram